பொது செய்தி

தமிழ்நாடு

புதராக மாறியது ஏரிக்கரை நடைபாதை

Added : டிச 16, 2020
Share
Advertisement
காக்களூர் : காக்களூர் ஏரிக்கரையில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட நடைபாதை, தற்போது, செடிகள் வளர்ந்து, புதராக மாறி விட்டதால், நடைபயிற்சியாளர்கள், ஆபத்தான முறையில் சாலையில் நடந்து செல்கின்றனர். திருவள்ளூர் நகராட்சி பஸ் நிலையத்திற்கு பின்புறம் உள்ளது, காக்களூர் ஏரி. இந்த ஏரி, நகராட்சி மற்றும் காக்களூர் ஊராட்சி எல்லையில் உள்ளது.இந்த ஏரியில், தண்ணீர்

காக்களூர் : காக்களூர் ஏரிக்கரையில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட நடைபாதை, தற்போது, செடிகள் வளர்ந்து, புதராக மாறி விட்டதால், நடைபயிற்சியாளர்கள், ஆபத்தான முறையில் சாலையில் நடந்து செல்கின்றனர்.

திருவள்ளூர் நகராட்சி பஸ் நிலையத்திற்கு பின்புறம் உள்ளது, காக்களூர் ஏரி. இந்த ஏரி, நகராட்சி மற்றும் காக்களூர் ஊராட்சி எல்லையில் உள்ளது.இந்த ஏரியில், தண்ணீர் தேங்கினால், திருவள்ளூர், காக்களூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். மேலும், உபரி நீர், வீரராகவர் கோவில் குளத்திற்கு செல்லும் வகையில், இந்த ஏரியில் இருந்து கால்வாய் வசதி உள்ளது. இந்த நிலையில், காக்களூர் ஏரி, 2016ல், 1 கோடி ரூபாய் மதிப்பில், துார் வாரி சீரமைக்கப்பட்டதுடன், கரையைச் சுற்றிலும், 4 கி.மீ., துாரத்திற்கு நடைபாதை அமைக்கப்பட்டது.

இந்த நடைபாதையில், காலை, மாலை நேரங்களில், திருவள்ளூர், காக்களூர் பகுதியைச் சேர்ந்தவர்கள், நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.ஏரிக்கரையில் அமைக்கப்பட்ட நடைபாதை, அவ்வப்போது, உடைந்ததாலும், கரையின் தரை உள் வாங்கியதாலும், பல இடங்களில் தளம் உடைந்து, சேதமடைந்து உள்ளது.சில இடத்தில் மண் உள் வாங்கியதால், வழிஎங்கும் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், நடைபாதை முழுதும், முறையான பராமரிப்பு இல்லாததால், செடிகள் வளர்ந்து, புதராக மாறிவிட்டது.முட்செடி வளர்ந்துள்ளதால், விஷ பூச்சிகளும், நடைபாதையில் வந்து விடுகின்றன.

இதன் காரணமாக, நடைபயிற்சியாளர்கள் அவதிப்படுகின்றனர். தற்போது, ஆபத்தான முறையில், சாலையில் நடந்து செல்கின்றனர். எனவே, புதராக மாறி, சேதமடைந்த நடைபாதையை தரமாக சீரமைக்க வேண்டும் என, நடைபயிற்சியாளர்கள், பொதுப்பணித் துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X