பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : டிச 16, 2020
Share
Advertisement
நகை, பணம் திருட்டுசெவ்வாப்பேட்டை: திருவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் விநாயகம், 64. இவர், கடந்த 8ம் தேதி, குடும்பத்தினருடன் சொந்த ஊரான, திருநெல்வேலி மாவட்டம், பண்ணம்பாறை கிராமத்திற்கு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டார்.நேற்று முன்தினம் இரவு திருவூர் வந்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து, 8

நகை, பணம் திருட்டுசெவ்வாப்பேட்டை: திருவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் விநாயகம், 64. இவர், கடந்த 8ம் தேதி, குடும்பத்தினருடன் சொந்த ஊரான, திருநெல்வேலி மாவட்டம், பண்ணம்பாறை கிராமத்திற்கு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டார்.நேற்று முன்தினம் இரவு திருவூர் வந்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து, 8 சவரன் செயின், 2 கிலோ சில்வர் பொருட்கள் என, 1.85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மாயமானது தெரிய வந்தது.இதுகுறித்து, செவ்வாப் பேட்டை போலீசில், செந்தில் விநாயகம் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

இருவர் மாயம்திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த, மடவிளாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன், 70. இவர், கடந்த, 5ம் தேதி மாலை, வீட்டை விட்டு வெளியில் சென்றவர், வீடு திரும்பவில்லை.உறவினர் வீடுகளில் தேடியும் அவரை காணவில்லை. இதையடுத்து, திருவள்ளூர் தாலுகா போலீசில், அவரது மனைவி பரிபூரணம் அளித்த புகாரையடுத்து, போலீசார் விசாரிக்கின்றனர். ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம், பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, 54. இவரது இரண்டாவது மகள் லட்சுமி, 22. பத்தாம் வகுப்பு வரை படித்த இவர், சோழவரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.காலையில் வேலைக்கு செல்பவர், இரவு, 7:00 மணிக்கு, வீடு திரும்புவார்.இந்நிலையில், கடந்த, 14ம் தேதி, வேலைக்குச் செல்வதாக கூறி சென்றவர், வீடு திரும்பவில்லை.அவரது தந்தை, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தொழிற்சாலையில் விசாரித்தார். இதில், அன்றைய தினம் வேலைக்கு வரவில்லை என, தெரிவித்தனர். இதுகுறித்து, பெரியபாளையம் போலீசில், சுந்தரமூர்த்தி அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்குப் பதிந்து, லட்சுமியை தேடி வருகின்றனர்.மணல் கடத்தியவர்களுக்கு 'காப்பு'திருவள்ளூர்: திருவள்ளூர் டவுன் போலீசார், நேற்று முன்தினம் இரவு, கற்குழாய் தெரு பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரண்டு, பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தில், மூன்று பேர் வந்து கொண்டிருந்தனர்.அவர்களை நிறுத்தி சோதனை செய்ததில், மூட்டையில், மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து, போலீசார், அதை ஓட்டி வந்த, பாக்கம், வெற்றிவேல்,36, விஜயராஜா, 37, ஆகிய இருவரையும் கைது செய்தனர். தப்பியோடிய, கார்த்திக் என்பவரை தேடி வருகின்றனர்.வாலிபருக்கு கொலை மிரட்டல்கடம்பத்துார்: கடம்பத்துார் அடுத்த, காரணி கிராமத்தைச் சேர்ந்தவர் சரண்ராஜ், 22. இவர் நேற்று முன்தினம், வெண்மனம்புதுார் ரேஷன் கடை அருகே நின்று கொண்டிருந்தார்.அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த அஜீத்குமார் மற்றும் இவர், சரண்ராஜிடம் முன்விரோதம் காரணமாக தகராறில் ஈடுபட்டு, ஆபாசமாக கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதுகுறித்து, கடம்பத்துார் போலீசில், சரண்ராஜ் அளித்த புகாரையடுத்து, போலீசார் அஜீத்குமார் உட்பட இருவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.பம்ப் ஆப்பரேட்டர் பலிஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அடுத்த, குமரப்பேட்டை கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் சுப்ரமணி, 55. அந்த ஊராட்சியில், பம்ப் ஆப்பரேட்டராக பணியாற்றி வந்தார். கடந்த, 14ம் தேதி, கிராமத்தில் உள்ள ஏரிக்குச் சென்றார். அங்கு, கால் தவறி ஏரியில் விழுந்து, தண்ணீரில் தத்தளித்து இறந்தார்.இதுகுறித்து, பெரியபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X