பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்...

Added : டிச 16, 2020
Share
Advertisement
கடலோரத்தில் சாரல் மழைமாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டத்தில், 'நிவர், புரெவி' புயல் காரணமாக, கன மழை பெய்தது. இம்மாதம், 3ம் தேதிக்கு பின், மழை ஓய்ந்தது.தற்போதைய வளிமண்டலத்தால், நேற்று, மேகமூட்டம் ஏற்பட்டு, சாரல் மழையும் பெய்தது. மாமல்லபுரம், கல்பாக்கம், கூவத்துார் சுற்றுபுற பகுதிகளில், காலை முதல், அவ்வப்போது, சாரலாக மழை துாறியது.இலவச மருத்துவ முகாம்உத்திரமேரூர்:

கடலோரத்தில் சாரல் மழைமாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டத்தில், 'நிவர், புரெவி' புயல் காரணமாக, கன மழை பெய்தது. இம்மாதம், 3ம் தேதிக்கு பின், மழை ஓய்ந்தது.தற்போதைய வளிமண்டலத்தால், நேற்று, மேகமூட்டம் ஏற்பட்டு, சாரல் மழையும் பெய்தது. மாமல்லபுரம், கல்பாக்கம், கூவத்துார் சுற்றுபுற பகுதிகளில், காலை முதல், அவ்வப்போது, சாரலாக மழை துாறியது.இலவச மருத்துவ முகாம்உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம், கருவேப்பம்பூண்டியில், இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பொது மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில், நேற்று முன்தினம் நடந்த இம்முகாமிற்கு, உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகுமார் தலைமை வகித்தார்.இதில், மகப்பேறு, குழந்தை, கண், காது, மூக்கு, தொண்டை, தோல், பல், எலும்பு முறிவு உள்ளிட்ட பல பிரிவு மருத்துவ நிபுணர்கள், கிராமவாசிகளுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர். இதில், 160 பேர் பங்கேற்று, பயனடைந்தனர்.சர்வதேச தன்னார்வலர் தினம்உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம் அனுமந்தண்டலத்தில், 'ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா' குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் சார்பில், சர்வதேச தன்னார்வலர் தின விழா நடந்தது.அனுமந்தண்டலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்த விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் சரசு தலைமை வகித்தார்.தன்னார்வலர்கள் சேவை குறித்தும், செயல் பாடுகள் குறித்தும், தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் முதுநிலை திட்ட மேலாளர் கிருபாகரன் பேசினார்.அனுமந்தண்டலம், புலிவாய், மலையாங்குளம், புத்தளி இளநகர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X