சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முக கவசம் அணியாதவர்களிடம் ரூ.9.83 கோடி அபராதம் விதிப்பு

Added : டிச 16, 2020
Share
Advertisement
செங்கல்பட்டு : முக கவசம் அணியாத, 12 லட்சம் பேருக்கு, 9.83 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்தில், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், நேற்று, ஆய்வு செய்தார்.அப்போது, கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுமக்கள் முக கவசம் அணியவும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கவும் வேண்டும்

செங்கல்பட்டு : முக கவசம் அணியாத, 12 லட்சம் பேருக்கு, 9.83 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்தில், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், நேற்று, ஆய்வு செய்தார்.அப்போது, கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுமக்கள் முக கவசம் அணியவும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கவும் வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, துணை சுகாதார இயக்குனர் பிரியாராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.அப்போது, பஸ் நிலையத்தில், ஒரு மூதாட்டி, முக கவசம் இல்லாமல் அமர்ந்திருந்தார்.

இதை பார்த்த சுகாதார செயலர், மூதாட்டிக்கு முக கவசம் அணிவித்தார்.பின், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. முக கவசம், சமூக இடைவெளி மற்றும் அனைத்து பொது சுகாதார வழிமுறைகளையும், பொதுமக்கள் பின்பற்றியதால், தொற்று குறைந்துள்ளது.

தடுப்பூசி, கண்டுபிடிக்கும் நிலையில்தான் உள்ளது. இதனால், முக கவசம், சமூக இடைவெளியை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.தமிழகத்தில், முக கவசம் அணியாத, 12 லட்சம் பேருக்கு, 9.83 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.குட்கா புகையிலை, பொருட்கள் விற்பனை செய்வது, சட்டப்படி குற்றமாகும். குட்கா விற்பனை செய்வதாக புகார் வந்தால், காவல் துறை, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுப்பார்கள். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X