திருத்தணி : திருத்தணி முருகன் மலைக்கோவிலில் உள்ள கடைகளை வியாபாரிகள் யாரும் ஏலம் எடுக்காததால், நேற்று, கோவில் நிர்வாகம் அனைத்து கடைகளுக்கும், 'சீல்' வைத்து, தகடுகளால் மூடியது.
திருத்தணி முருகன் கோவிலில், மலை பகுதியில், கோவில் நிர்வாகம் சார்பில், 30க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டுள்ளன.இந்த கடைகளுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை, பொது ஏலம் நடத்தி, வியாபாரிகளுக்கு வாடகைக்கு விடப்படுகிறது.இந்நிலையில், இந்த கடைகளுக்கு நடப்பாண்டிற்கான ஏலம், இரு முறை கோவில் நிர்வாகத்தால் விடப்பட்டது. ஏலத் தொகை அதிகம் என, வியாபாரிகள் யாரும் கடைகளை வாடகைக்கு எடுக்க முன்வரவில்லை.இதனால், நேற்று, கோவில் இணை ஆணையர் பழனிக்குமார், உதவி ஆணையர் ரமணி, கோவில் அதிகாரிகள், ஊழியர்களுடன் மலைக் கோவிலுக்கு சென்று, ஏலம் எடுக்காத கடைகளை மூடி சீல் வைத்தனர்.
மேலும், அந்த கடைகளுக்கு இரும்பு தகடுகளால் தடுப்பு அமைத்தும், கடைகளை யாரும் திறக்காதவாறு, பேரி கார்டு அமைத்தும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அனைத்து கடைகளும், மூடப்பட்டு உள்ளதால், கோவிலுக்கு வந்த பக்தர்கள் பூஜை பொருட்கள் வாங்க முடியாமல் தவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE