சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

விவசாயிகளே பலிகடா ஆகாதீர்!

Added : டிச 16, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
விவசாயிகளே பலிகடா ஆகாதீர்!கு.காந்திராஜா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து, டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், இவர்கள் எதற்காக போராடுகின்றனர் என்பதே, தெளிவில்லாமல் இருக்கிறது.விவசாயி வருமானத்தை பெருக்குவதற்காக, மத்திய அரசு புதிதாக, மூன்று வேளாண் சட்டங்களை ஏற்படுத்தி உள்ளது.பழைய முறையில்,

விவசாயிகளே பலிகடா ஆகாதீர்!

கு.காந்திராஜா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து, டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், இவர்கள் எதற்காக போராடுகின்றனர் என்பதே, தெளிவில்லாமல் இருக்கிறது.விவசாயி வருமானத்தை பெருக்குவதற்காக, மத்திய அரசு புதிதாக, மூன்று வேளாண் சட்டங்களை ஏற்படுத்தி உள்ளது.பழைய முறையில், விவசாயி உற்பத்தி செய்யும் அத்தியாவசிய உணவுப் பொருளுக்கு, அரசு விலை நிர்ணயம் செய்யும். விவசாயிகளிடம் இருந்து, விளைபொருளை கொள்முதல் செய்யும்.புதிய சட்டத்தின்படி, விவசாயி, தான் உற்பத்தி செய்யும் பொருளுக்கு விலை நிர்ணயம் செய்ய முடியும். மேலும் விளைபொருளை யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம். பிற மாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.
தனியார் நிறுவனத்திற்கு, ஒப்பந்த அடிப்படையில், நல்ல விலையிலும் விற்கலாம். தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தாலும், விவசாயிக்கு தான் நிலம் சொந்தமாக இருக்கும் என்பதற்கும், சட்ட பாதுகாப்பு செய்யப்பட்டிருக்கிறது.இந்த வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் வாழ்வில் பெரும் முன்னேற்றத்தை வழங்கும் புரட்சிகரமான திட்டம் ஆகும். இதனால், விவசாயிகளின் பொருளாதாரம் உயரும்.இதை புரிந்து கொள்ளாமலோ அல்லது புரிந்தும், அரசியல் காரணத்திற்காகவோ, இச்சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்துவது, விவசாயிகள் தன் தலையில், தானே மண் அள்ளிப் போட்டுக் கொள்வதற்கு சமம்.இந்த வேளாண் சட்டம், விவசாயிகளை பாதிக்கும் என்றால், நாடு முழுதும் போராட்டம் நடந்திருக்கும். இது, அரசியலுக்காக துாண்டி விடப்படும் போராட்டமாக இருக்கிறது.எதிர்க்கட்சிகளின் அரசியல் வெறுப்புணர்ச்சிக்கு, விவசாயிகள் பலிகடா ஆகாமல், போராட்டத்தை கைவிட வேண்டும். தங்கள் முன்னேற்றத்திற்கு கிடைத்திருக்கும், சிறந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
விவசாயிகள், பொருளாதார ரீதியில் முன்னேறும்போது தான், நாடும் சிறப்பான முன்னேற்றம் காணும். அதற்கு வழி செய்யும், புதிய வேளாண் சட்டங்களுக்கு, விவசாயிகள் முழு ஆதரவு அளிக்க
வேண்டும்.

50 ஆண்டு எதிர்ப்பு அலை!

கே.மகாதேவன், திண்டுக்கலிலிருந்து எழுதுகிறார்: நடிகர் ரஜினி, அரசியல் கட்சி துவக்கப்போவதாக அறிவித்து விட்டார். பிற கட்சிகளை விட, அரசியல் விமர்சகர்களிடம் கொஞ்சம் பதற்றம் தெரிகிறது; அது ஏன் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.ஒரு விமர்சகர், 'டிவி' விவாதத்தில், '1996 - 2000 காலகட்டத்திலேயே ரஜினி, அரசியலுக்கு வந்து இருக்க வேண்டும். இப்போது வாய்ப்பில்லை' எனச் சொல்கிறார்.அவரே, 'ஜெ.,வும், கருணாநிதியும் உயிரோடு இருந்த போது, அரசியலுக்கு வர துணிச்சல் இல்லை. இப்போது வெற்றிடம் இருக்கிறது வருகிறேன்' என்றும் கூறுகிறார்.ஜெ.,வும், கருணாநிதியும் இருந்தபோதே, அவரைச் சுற்றி,அரசியல் இருந்ததே... அதை மறுக்க முடியுமா? ரஜினியே, 'வெற்றிடம் இருப்பதால் தான்,
அரசியலுக்கு வருகிறேன்' எனக், கூறிவிட்டார்.இன்னொரு அரசியல் விமர்சகர், '1996ல், ரஜினி ஆதரவு பெற்று கருணாநிதியும், மூப்பனாரும் கூட்டணி அமைத்து, ஜெ.,வுக்கு எதிராக மிகப் பெரிய வெற்றியை பெற்றது என்பது, ஏதோ காக்கை உட்காரபனம்பழம் விழுந்த கதை' என்கிறார்.அன்றைக்கு, ரஜினி ஆதரவு கொடுக்கவில்லை என்றால், மூப்பனார், த.மா.கா.,வை, வெறும், 15 நாட்களில் உருவாக்கி இருக்க மாட்டார். இது அனைவருக்கும் தெரியும்.ரஜினி மட்டும் அமைதியாக இருந்திருந்தால், தி.மு.க., மூன்றாவது இடத்திற்கு தான் சென்றிருக்கும்.ஜெ., எதிர்ப்பு அலையில், வைகோ எளிதாக வென்றிருப்பார்.அப்போது நடந்த இடைத்தேர்தலில், தி.மு.க., மற்றும் கம்யூ., கட்சியை மூன்றாம் இடத்திற்கு தள்ளி, இரண்டாம் இடத்துக்கு வந்தவர், வைகோ என்பது நினைவு கொள்ள வேண்டியுள்ளது.கடந்த, 1996ல் தேர்தல் முடிவுகள் வந்த போது வைகோ, 'காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடும் போது, அதில் சில சந்தனக் கட்டைகளையும் சேர்த்து அடித்துச் செல்வது இயல்பு தானே' என்றார்.ரஜினியின் அரசியல் குரலை, 'காட்டாற்று வெள்ளம்' என, அவர் உவமைப்படுத்தினார்.அந்த தேர்தலில்,பர்கூர் தொகுதியில், ஜெ., தோல்வி அடைந்தார். இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து, 40 ஆண்டுகளில், தி.மு.க., 100 சீட்டுகளுக்கு மேல் வென்ற, ஒரே ஒரு தேர்தல், அது மட்டும் தான்.ஆனால், அந்த அரசியல் விமர்சகர் அனைத்தையும் மடை மாற்றம் செய்கிறார். இன்று கருணாநிதியும், மூப்பனாரும், சோவும் உயிருடன் இல்லையே... என்ன செய்வது?மற்றொரு விமர்சகர், 'எம்.ஜி.ஆரையும், ரஜினியையும் ஒப்பிட முடியாது' என்கிறார். ஆமாம், 'யாரும், எம்.ஜி.ஆர்., ஆக முடியாது. அவர் ஒரு யுகப் புருஷன்' என, ரஜினியே அதை ஒப்புக் கொண்டுள்ளார்.பிறரிடம் இருந்து, ரஜினி ரசிகர்கள் சற்று வித்தியாசமானவர்கள். தங்களை, ரஜினியாகவே எண்ணிக் கொள்வர்.

ரஜினி போல் உடை அணிவர்; சிகை அலங்காரம் செய்து கொள்வர்; கையில் காப்பு கட்டிக் கொள்வர். அவர் போல் ருத்திராட்சம் அணிந்து கொள்வர்.'ரஜினி முருகன், ரஜினி ஜாபர்' என, தன் பெயரிலேயே ரஜினியையும் சேர்த்து கொள்வர். இவர்கள், ரஜினி மீது வைத்திருக்கும் விசுவாசம் உண்மையானது. இவர்கள் செய்யவிருக்கும் தேர்தல் பணிக்காக, கட்சி தலைவர்களிடம் இருந்து பணம் பெற்று, டீ குடிக்க கூட எதிர்பார்க்க மாட்டார்கள்.தி.மு.க., அல்லது அ.தி.மு.க., இதில் ஏதோ ஒன்று தான், மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என நினைப்போர் தான், ரஜினியை கண்மூடித்தனமாக எதிர்க்கின்றனர்.வரும் தேர்தல், சற்று வித்தியாசமானது. ஆட்சியாளர்களுக்கு எதிராக ஒவ்வொரு, ஐந்து ஆண்டு முடிவிலும், எதிர்ப்பு அலை, ஒரு குறிப்பிட்ட சதவீதம் வீசும். அது, இந்த முறை, 50 ஆண்டுகள் எதிர்ப்பு அலையாக இருக்கும்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
17-டிச-202006:03:56 IST Report Abuse
D.Ambujavalli எல்லாம் சரிதான் ஆனால் ரஜினியின் குடும்பக் குழப்பங்கள், கோர்ட்டின் தலையீடு எல்லாம் அவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிடுமோ என்ற நிலை உள்ளது அதையே பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்து எதிர்ப்பு ஆயுதமாக்குகிறார்களே அதை முன்னின்று சரி செய்து தன்னை நிரூபிக்க வேண்டாமா நாளை பிரசாரங்களில் மற்ற கட்சிகளுக்கு இது அவல் ஆகிவிடுமே
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-டிச-202004:02:11 IST Report Abuse
J.V. Iyer பாஜக அரசு கொண்டுவந்த வேளாண்மை சட்டத்தை எந்த நேர்மையான விவிசாயிகளாவது எதிர்ப்பார்களா? சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்ள அவர்களிடம் காசில்லை. செய்பவர்கள் எல்லாம் கொழுத்த பணம் படைத்த இடைத்தரகர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X