டிச., 17, 1905
உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில், 1905 டிச., 17ம் தேதி பிறந்தவர், முகமது இதயத்துல்லா. நாக்பூர், வசந்த்ராவ் நாயக் அரசு கலை மற்றும் சமூக அறிவியல் கழகம் மற்றும் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலையில் பயின்றார்.நம் நாட்டின், 11வது தலைமை நீதிபதியாக பணியாற்றினார். 1969ல், ஜனாதிபதி பதவியில் இருக்கும்போதே, ஜாகிர் உசேன் மரணமடைந்தார். இதையடுத்து, இடைக்கால ஜனாதிபதியாக, வி.வி.கிரி நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, வி.வி.கிரி தன் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதில், முகமது இதயத்துல்லா, தற்காலிக
ஜனாதிபதியாக, 35 நாட்களுக்கு பொறுப்பு வகித்தார். 1979ல், துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். இவரை நினைவுகூரும் வண்ணம், சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ராய்ப்பூரில், 2003ல், இதயத்துல்லா தேசிய சட்டப் பல்கலை நிறுவப்பட்டது. 1992 செப்., 18ம் தேதி, தன், 86வது வயதில் காலமானார்.முகமது இதயத்துல்லா பிறந்த தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE