அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., கூட்டணியில் ம.நீ.மை.,

Added : டிச 16, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
காங்கிரசை கழற்றி விட்டு, மக்கள் நீதி மையம் கட்சியை, கூட்டணியில் சேர்ப்பது குறித்து, அக்கட்சித் தலைவர் கமலுடன், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.நடிகர் ரஜினி, ஜனவரி மாதத்தில் கட்சி துவக்க உள்ளார். அவரது கட்சி பிரிக்கிற ஓட்டுகள், தி.மு.க., ஆட்சி வருவதற்கு தடையாக இருக்கும் என, கருதப்படுகிறது. அதேபோல், 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற
 தி.மு.க., கூட்டணியில் ம.நீ.மை.,

காங்கிரசை கழற்றி விட்டு, மக்கள் நீதி மையம் கட்சியை, கூட்டணியில் சேர்ப்பது குறித்து, அக்கட்சித் தலைவர் கமலுடன், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

நடிகர் ரஜினி, ஜனவரி மாதத்தில் கட்சி துவக்க உள்ளார். அவரது கட்சி பிரிக்கிற ஓட்டுகள், தி.மு.க., ஆட்சி வருவதற்கு தடையாக இருக்கும் என, கருதப்படுகிறது. அதேபோல், 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற முழக்கத்துடன், தன் முதல் கட்ட பிரசாரத்தை, கமல் மேற்கொண்டுள்ளார். அதனால், ரஜினியை தொடர்ந்து, கமலும், தி.மு.க., வெற்றிக்கு முட்டுக்கட்டையாக இருப்பார் என, 'ஐபேக்' தரப்பில் கூறப்பட்டுள்ளது.


ஆலோசனை

இதனால், தி.மு.க., கூட்டணியில், மக்கள் நீதி மையம் கட்சியைச் சேர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்காக, காங்கிரசுக்கான தொகுதிகளை குறைக்கவும், வழிக்கு வராவிட்டால் அக்கட்சியை, 'கழற்றி' விடவும், தி.மு.க., ஆலோசித்து வருகிறது.காங்கிரசுக்கு பதிலாக, மக்கள் நீதி மையம் கட்சிக்கு, 40 தொகுதிகள் வரை வழங்கலாம் என, தி.மு.க., மேலிடத்திடம் ஐபேக் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கமலும், உதயநிதியும் கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்திய தகவல் வெளியாகி உள்ளது.

'தற்போதைய சூழலில் கூட்டணி தொடர்பாக, எந்த முடிவும் எடுக்க முடியாது. 'தேர்தல் கமிஷனிடம், 'டார்ச்லைட்' சின்னம் பெறுவதிலும், முதல் கட்ட பிரசாரத்திலும், நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்' என்ற பதிலை மட்டும் உதயநிதியிடம், கமல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கமல் அளித்த பேட்டியில், ''தி.மு.க.,வுடன் கூட்டணி அமையுமா என்பதை, இப்போது சொல்ல முடியாது. ஊழலற்ற, நேர்மையான ஆட்சி அமைக்க, எங்களுடன் யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். ''மூன்றாவது அணி அமைந்தால், அதற்கு தலைமை ஏற்க தயார். ரஜினியுடன் இணைந்து பணியாற்றவும் தயாராக இருக்கிறேன்,'' என்றார்.

இது குறித்து, அவரது கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த லோக்சபா தேர்தலில், மக்கள் நீதி மையம் கட்சிக்கு ஆதரவாக, ஐபேக் நிறுவனம் தேர்தல் வியூக பணியில் ஈடுபட்டது. ஐபேக் நிறுவனரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோரும், கமலும் நண்பர்கள்.


தொகுதிகள்பிரசாந்த் கிஷோர் ஆலோசனையின்படி, கமலை கூட்டணியில் சேர்க்க, தி.மு.க., மேலிடம் சம்மதம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகள் ஒதுக்கினால் போதும். அதை ஏற்று, கூட்டணி யில் இருக்கட்டும்; இல்லை யென்றால் வெளியேறட்டும் என, தி.மு.க., நினைக்கிறது. கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வுடன், தே.மு.தி.க., கூட்டணி அமைத்ததால், தி.மு.க., ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.இந்த தேர்தலில், ஆட்சி அமைக்கும் வாய்ப்பை நழுவ விடக்கூடாது என, தி.மு.க., மேலிடம் கருதுகிறது.இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muradan Muthu - Madurai,இந்தியா
17-டிச-202016:34:40 IST Report Abuse
Muradan Muthu நம்ப ஒருங்கிணைப்பாளர் வைகோ யாருடன் இருக்கிறார்?
Rate this:
Cancel
sriram - Chennai,இந்தியா
17-டிச-202014:57:01 IST Report Abuse
sriram பீகார் பிராமணர் திமுகவுக்கு தவசம் பண்ணாம போக மாட்டார் போல இருக்கே
Rate this:
Cancel
rameshkumar natarajan - kochi,இந்தியா
17-டிச-202013:46:50 IST Report Abuse
rameshkumar natarajan one reader is writing about Hindus Enemy. Let me tell one thing here. If we observe very closely , one thing will come out that upper e people in Hindu religion are talking about Hindu Enemy. Rest of the people are least bothered about Hindu enemy or Hindu Friend. I am an shiv bakth, but i never felt Dravidian parties has hurt hindu sentiments anywhere. If, dravidian parties are not there, all the deprssed classes in TN wouldn't have come up, that's the fact.
Rate this:
sriram - Chennai,இந்தியா
17-டிச-202015:00:18 IST Report Abuse
sriramஹிந்து என்றால் திருடன் என்று சொன்னவர் ஹிந்து கோவில்களில் அசிங்கமான பொம்மைகள் இருக்கும் என்று சொன்னவரின் நண்பர் ஏகாதசி பட்டினி ஒரு ஏமாந்து வேலை, ஆனால் ரம்ஜான் நோம்பு அப்படி இல்லை என்றெல்லாம் சொன்னவரை என்ன என்று சொல்வது? இவற்றை நீங்கள் நியாயப்படுத்தினால் நீங்கள் கும்பிடும் சிவன் கூட உங்களை மன்னிக்க மாட்டார்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X