விவசாயிகள் போராட்டம்: தீர்வு காண சுப்ரீம் கோர்ட் யோசனை

Updated : டிச 18, 2020 | Added : டிச 16, 2020 | கருத்துகள் (15+ 20)
Share
Advertisement
புதுடில்லி :வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு தீர்வு காண, உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.'பிரச்னைகளைத் தீர்க்க, விவசாயிகள் மற்றும் மத்திய அரசு பிரதிநிதிகள் இடம் பெறும், தேசிய குழு ஒன்றை அமைக்கலாம்' என, அது தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச்
விவசாயிகள், போராட்டம், தீர்வு, சுப்ரீம் கோர்ட், யோசனை, குழு ஆலோசனை

புதுடில்லி :வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு தீர்வு காண, உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.'பிரச்னைகளைத் தீர்க்க, விவசாயிகள் மற்றும் மத்திய அரசு பிரதிநிதிகள் இடம் பெறும், தேசிய குழு ஒன்றை அமைக்கலாம்' என, அது தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டில்லியில், கடந்த, 20 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், டில்லியில்போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
போக்குவரத்து நெரிசல்


இந்நிலையில், டில்லியைச் சேர்ந்த சட்டக் கல்லுாரி மாணவர் ரிஷப் சர்மா உட்பட பலர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருந்ததாவது:டில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால், எல்லைகள் மூடப்பட்டுள்ளன; போக்குவரத்து முடங்கி, கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து, ஷாகின்பாக் பகுதியில் நடந்த போராட்டம் தொடர்பான வழக்கில், 'பொது இடங்களை காலவரையின்றி ஆக்கிரமித்து, போராட்டம் நடத்தக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் இன்னும் முழுமையாக குறையவில்லை. அதனால், தொற்று நோய் பரவலை தடுக்கவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்கவும், போராட்டம் நடத்தும் விவசாயிகளை அப்புறப்படுத்த வேண்டும்.இவ்வாறு, மனுக்களில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணை, தலைமை நீதிபதி பாப்டே தலைமையில், நீதிபதி போபண்ணா, ராமசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று நடந்தது.

அப்போது நீதிபதிகள், 'டில்லிக்குள் விவசாயிகள் நுழைவதை தடுத்தது யார்; சாலைகளை மூடியது யார்; விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களுடன், மத்திய அரசு இதுவரை நடத்திய பேச்சு பலன் அளிக்கவில்லையா' என, கேட்டனர்.

அதற்கு, மத்திய அரசு சார்பில் ஆஜரான, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது: விவசாயிகளுக்கு எதிராக, மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரச்னை அடிப்படையில், அரசு அவர்களுடன் பேச்சு நடத்துகிறது. ஆனால், விவசாயிகளுடன் எதையும் ஏற்கவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.


தேசிய பிரச்னை


இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது: வேளாண் சட்டங்கள் தொடர்பாக, விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்தும் பேச்சு, மீண்டும் தோல்வியடைய வாய்ப்பு உள்ளது. இதனால், விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க, தேசிய அளவில் குழு ஒன்றை அமைக்கலாம். இதில், விவசாயிகள், அரசின் பிரதிநிதிகள் இடம் பெற வேண்டும். விவசாயிகள் போராட்டம், தேசிய பிரச்னையாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதற்கு முன், இப்பிரச்னைக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை அப்புறப்படுத்துவது பற்றி பதில் அளிக்கக் கோரி, மத்திய, டில்லி அரசுகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்படுகிறது.இவ்வாறு, நீதிபதிகள் கூறினர்.விசாரணை, இன்றும் தொடர்ந்து நடக்கிறது.

இந்நிலையில், விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டுள்ளதால், விரைவில் தீர்வு ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


'ஆதரவு அமைப்புகளுடன் பேசாதீர்கள்!'


வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக இருக்கும் விவசாய சங்கங்களுடன் பேசுவதை, மத்திய அரசு நிறுத்த வேண்டும் என, டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, விவசாயிகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் இடம் பெற்றுள்ள, 'சன்யுக்த் கிசான் மோர்ச்சா' என்கிற விவசாய அமைப்பைச் சேர்ந்த தர்ஷன் பால், மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணைச் செயலர் விவேக் அகர்வாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை அவமானப்படுத்துவதை, அரசு நிறுத்த வேண்டும். எங்களுக்கு இணையாக, வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக இருக்கும் மற்ற விவசாயிகள் சங்கங்களுடன் பேசுவதை, அரசு நிறுத்த வேண்டும்.வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டு வருகிறோம் என, மத்திய அரசு, கடந்த, 9ல் தெரிவித்த பரிந்துரையை, நாங்கள் நிராகரித்து விட்டோம். எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்து விட்டதால், உங்களுக்கு பதில் கடிதம் எழுதவில்லை.இவ்வாறு, கடிதத்தில் கூறிஉள்ளார்.
பள்ளி நடத்தும் விவசாயிகள்


டில்லியில், சிங்கு எல்லை பகுதியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் சிலர், குடிசை பகுதிகளைச் சேர்ந்த குழந்தை களுக்காக, தற்காலிகமாக பள்ளி ஒன்றை நடத்த துவங்கியுள்ளனர். 'டென்ட்' அமைத்து, அதில் பள்ளி நடத்தி வருகின்றனர்.

இது பற்றி அவர்கள் கூறுகையில், 'குடிசை பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள், தினமும் உணவுக்காக போராட்டம் நடத்தும் இடத்துக்கு வருகின்றனர். அவர்களுக்கு உணவளிப்பதுடன், பாடமும் நடத்தலாம் என்ற எண்ணத்தில், தற்காலிக பள்ளியைத் துவக்கியுள்ளோம். போராட்டம் முடியும் வரை, இந்த சேவை தொடரும்' என்றனர்.


5 நிமிடத்தில் தீர்வு


மத்திய அரசு நினைத்தால், விவசாயிகள் போராட்டத்துக்கு, 30 நிமிடத்தில் தீர்வு காண முடியும். குறிப்பாக, பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு, விவசாயிகளுடன் பேசினால், ஐந்து நிமிடத்தில் தீர்வு ஏற்படும்.
சஞ்சய் ராவத்,
மூத்த தலைவர், சிவசேனா

Advertisement
வாசகர் கருத்து (15+ 20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
17-டிச-202016:26:26 IST Report Abuse
Dr. Suriya அப்போ... தாவித் இப்ராகிம் கூட பிரதமர் நேரடியா பேச்சுவார்த்தை நடத்தி பயங்கறவாதத்தை நிறுத்த சொல்லலாமா ஐயந்தே நிமிடத்தில் .... ராவத்து....
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
17-டிச-202013:53:24 IST Report Abuse
Sridhar உச்ச கோர்ட் தனி குழு அமைக்கட்டும். இரு சாரார்களையும் விசாரித்து தீர்ப்பளிக்கட்டும். அதற்குமுன் தாங்கள் முன்பு அளித்த தீர்ப்பை நடைமுறை படுத்தட்டும். அதாவது, பொதுஇடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்தக்கூடாது அவ்வாறு நடக்கும் போராட்டங்கள் சட்ட விரோதமானவை என இதே உச்ச கோர்ட் சமீபத்தில் தீர்ப்பு அளித்ததே, அந்த தீர்ப்பை அமல் படுத்தட்டும். எந்த ஒரு சிறுகும்பலும் அரசையோ பொதுமக்களையோ அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டால், அவர்கள் மீது உடனே கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தை அரசு சரியாக கையாளவில்லை அதன் விளைவு நாட்டில் இருக்கும் ஒவ்வொரு அராஜக கும்பல்களுக்கும் ஐடியா கிடைத்துவிட்டது. நாம் போராட்டம் என்ற பெயரில் வன்முறை மற்றும் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டால், இந்த அரசு தைரியமாக நம்மை தட்டி கேட்காது, ஒரு தண்டனையும் கொடுக்காது என்று தெரிந்தவுடன், அவனவன் இப்படித்தான் கிளம்புவான். இது முழுக்க முழுக்க அரசின் மெத்தனத்தால் வந்த விளைவு. நாடெங்கும் விவசாயிகள் அரசின் முழு ஆதரவில் மக்கள் வரிப்பணத்தில் தங்கள் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள், தங்களுக்கு வாழ்வாதாரத்தை அளித்தவர்களுக்கு எதிராக அவர்களை பாதிக்கும் வகையில் போராட்டம் நடத்துவது எந்தவகையில் நியாயம்? நல்ல உள்ளம் படைத்த அவர்களுள் சிலர் இதை யோசித்தர்கலேயானால், அவர்கள் உடனடியாக திருந்தி போராட்டத்தை கைவிடுவார்கள். இதில் மற்றுமொரு ஆச்சர்யம் என்னவென்றால், மிக பெரிய விவசாயிகள் சங்கங்களும் மற்ற மாநிலத்திலிருக்கும் விவசாயிகளும் இச்சட்டங்களுக்கு ஆதரவு அளித்த நிலையில், இந்த போராட்டக்காரர்கள், அரசு அவர்களுடன் பேசவோ அவர்கள் கருத்தை கேட்கவோ கூடாது என்கிறார்கள் நூறு சதவிகிதம் ஒடுக்கப்படவேண்டிய போராட்டம் மற்றும் மனநிலை.
Rate this:
Cancel
Nagarajan Thamotharan - Panagudi, Tirunelveli,இந்தியா
17-டிச-202012:19:01 IST Report Abuse
Nagarajan Thamotharan பிரிவினைவாதிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க மாநில மத்திய அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X