அரசியல் செய்தி

தமிழ்நாடு

காஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு

Added : டிச 16, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை:''கடந்த, 15 நாள் இடைவெளியில், 100 ரூபாய் விலையேற்றம் செய்யப்பட்ட, காஸ் சிலிண்டர் விலையை திரும்பப் பெற வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:கொரோனா ஏற்படுத்திய பெரும் தாக்கத்தால், மாதங்களாக, அனைத்து தரப்பு மக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். ஏழை, நடுத்தர வகுப்பினரின் அத்தியாவசியத் தேவையாக உள்ள பெட்ரோல், டீசல், காஸ் தாறுமாறாக

சென்னை:''கடந்த, 15 நாள் இடைவெளியில், 100 ரூபாய் விலையேற்றம் செய்யப்பட்ட, காஸ் சிலிண்டர் விலையை திரும்பப் பெற வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:கொரோனா ஏற்படுத்திய பெரும் தாக்கத்தால், மாதங்களாக, அனைத்து தரப்பு மக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். ஏழை, நடுத்தர வகுப்பினரின் அத்தியாவசியத் தேவையாக உள்ள பெட்ரோல், டீசல், காஸ் தாறுமாறாக விலையேற்றம் கண்டுள்ளன.மே மாதம், 600 ரூபாய் என உயர்ந்த சிலிண்டர் விலை, ஜூன் மாதத்திலும், ஜூலை மாதத்திலும் உயர்த்தப்பட்டது. டிச., மாதம் துவக்கத்தில், மீண்டும், 50 ரூபாய் உயர்த்தி, 660 ரூபாய் என, விற்பனை செய்யப்பட்டது.

கடந்த, 15 நாட்களுக்குள், இரண்டாவது முறை மீண்டும் உயர்த்தி, கூடுதலாக, 50 ரூபாய் விலையில், 710 ரூபாய்க்கு வினியோகம் செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.பொது மக்களின் வருமானம் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், 15 நாள் இடைவெளியில், சிலிண்டர் விலை, 100 ரூபாய் அதிகரித்துள்ளதால், இல்லத்தரசிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். மத்திய அரசு உடனே, சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.


மீட்க வேண்டும்!ஸ்டாலினின் மற்றொரு அறிக்கை:கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள போதும், தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது, எதிர்பாராததாக உள்ளது. கைது செய்யப்பட்டு உள்ள, 36 மீனவர்களையும், அவர்களது மீன்பிடி கருவிகளையும் பாது காப்பாக, தாயகம் மீட்டு வர, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


மா.செ., விலகல்!

சென்னை, அறிவாலயத்தில், ஸ்டாலின் முன்னிலை யில், வட சென்னை மாவட்ட தே.மு.தி.க., செயலர் மதிவாணன், தி.மு.க.,வில் இணைந்தார். அப்போது, வடக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் இளைய அருணா, செய்தி தொடர்பு இணைச் செயலர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.


49.5 சதவீதம் வேண்டும்!தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் அறிக்கை:ஐ.ஐ.டி.,களிலும், மத்திய பல்கலைகளிலும், பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின, சமுதாய இளைஞர்களுக்கு உள்ள, 49.5 சதவீத இடஒதுக்கீட்டில், 10 சதவீதத்தை கூட நிரப்பவில்லை.இந்திய உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., ஆசிரியர் தேர்வில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நீக்க வேண்டும் என்ற பரிந்துரையை துாக்கி, குப்பைத் தொட்டியில் வீசி விட்டு, ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்கள், மத்திய பல்கலைகள் அனைத்திலும், 49.5 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
17-டிச-202011:26:41 IST Report Abuse
rajan தாய்மார்கள் உடன் சேர்ந்துகொண்டு மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் செய்யுங்கள்வெறும் அறிக்கையுடன் நின்று விடாதீர்கள். கேஸ் விலை 100 ரூபாயில் உயர்வு என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. கச்சா எண்ணெய் விலை குறையும்போது கேஸ் விலை மற்றும் டீசல் பெட்ரோல் விலைகளை ஏன் குறைப்பதில்லை. முந்தைய மன்மோகன் சிங் அரசும் இதே மாதிரி அக்கிரமங்களை செய்தது.... மக்கள் ஏற்கனவே அதிருப்தியில் உள்ளனர். மளிகை பொருட்கள் விலையும் சரமாரியாக உயர்ந்துள்ளன. அரசாங்கமும் சேர்ந்துகொண்டு இப்படி மக்களை துன்புறுத்தினால் பிஜேபிக்கு ஒரு இடம் கூட தமிழகத்தில் கிடைக்காது.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
17-டிச-202006:50:40 IST Report Abuse
Bhaskaran மானியத்தை குறைத்துவிட்டு சிலிண்டர் விலையை கூட்டி மக்களுக்கு நன்மை செய்திருக்கும் மோடி நீடூழி வாழனும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X