ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு: மாநிலங்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு: மாநிலங்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு

Updated : டிச 18, 2020 | Added : டிச 16, 2020 | கருத்துகள் (6)
Share
புதுடில்லி: கடன் பெறுவதற்கு, 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டம் உள்ளிட்ட, நான்கு சீர்த்திருத்தங்களை அமல்படுத்த, மாநிலங்களுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு, பிப்ரவரி, 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசு, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, ஜி.எஸ்.டி.பி.,
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு, மாநிலங்கள், காலக்கெடு, நீட்டிப்பு, மத்திய அரசு, உத்தரவு

புதுடில்லி: கடன் பெறுவதற்கு, 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டம் உள்ளிட்ட, நான்கு சீர்த்திருத்தங்களை அமல்படுத்த, மாநிலங்களுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு, பிப்ரவரி, 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசு, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, ஜி.எஸ்.டி.பி., எனப்படும், மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து, மாநிலங்களுக்கு வழங்கப்படும் கடன் வரம்பை, இரண்டு சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது.

எனினும், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்தவேண்டும் என்ற நிபந்தனை, முன்வைக்கப்பட்டது.அதுமட்டுமல்லாமல், தொழில் செய்வதை எளிதாக்கும் சீர்த்திருத்தம், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கான சீர்த்திருத்தம் மற்றும் மின் துறையில் சில சீர்த்திருத்தங்களை செய்யவும் நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன. இவற்றை, வரும், 31ம் தேதிக்குள் நிறைவேற்றி, சலுகைகளை பெறலாம் என, அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ஒவ்வொரு சீர்த்திருத்தத்திற்கும், கூடுதலாக, ஜி.எஸ்.டி.பி.,யில் இருந்து, 0.25 சதவீதம் நிதி, கடனாக வழங்கப்படும் என்றும்; நான்கு சீர்த்திருத்தங்களை நிறைவேற்றும் மாநிலங்களுக்கு, கூடுதலாக, 2.14 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதுவரை, ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை, ஒன்பது மாநிலங்களும்; எளிதில் தொழில் செய்வதற்கான சீர்த்திருத்தங்களை, நான்கு மாநிலங்களும்; உள்ளாட்சி அமைப்பு சீர்த்திருத்தங்களை, ஒரு மாநிலமும் நிறைவேற்றி உள்ளன.இந்நிலையில், மாநிலங்களுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடுவை, வரும் பிப்ரவரி, 15ம் தேதி வரை நீட்டித்து, மத்திய நிதித்துறை அமைச்சகம், நேற்று உத்தரவு பிறப்பித்தது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X