சென்னை:தேசிய வடிவமைப்பு நிறுவன நுழைவு தேர்வு எழுதுவதற்கு, கொரோனா சோதனை கட்டாயம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், தேசிய வடிவமைப்பு நிறுவனமான, 'நிப்ட்'டின் பட்டப்படிப்பு களில் சேர்வதற்கு,நுழைவு தேர்வு எழுத வேண்டும். வரும் கல்வி ஆண்டுக்கான நுழைவு தேர்வுக்கு, டிச., 14 முதல் ஆன்லைனில் பதிவு துவங்கியுள்ளது.
தேர்வு எழுத விருப்பம் உள்ள மாணவர்கள்,ஜன., 21க்குள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். தவறினால் கூடுதல் கட்டணத்துடன், ஜன., 24க்குள் பதிவு செய்ய வேண்டும். பிப்., 1ல் ஹால் டிக்கெட் வெளியிடப்படும்; பிப்., 24ல், நுழைவு தேர்வு, தேசிய அளவில் ஒரே நாளில் நடத்தப் படுகிறது.
இந்த தேர்வில் பங்கேற்பதற்கு, மாணவர்கள் கொரோனா பரிசோதனை செய்து, தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் வர வேண்டும் என, தேசிய வடிவமைப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது.கூடுதல் விபரங்களை, https://nift.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE