சென்னை:ஜெயலலிதா நினைவிடத்தையும், அவர் வாழ்ந்த போயஸ் நினைவு இல்லத்தையும், ஒரே நேரத்தில் பொதுமக்கள் பார்வைக்கு திறக்க, அரசு திட்டமிட்டு உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.,விற்கு, மெரினாவில்,ரூ. 58 கோடிமதிப்பில் நினைவிடம் கட்டும் பணி நடந்து வருகிறது.
முன்னேற்பாடு
இங்கு, அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா அமைக்கும் பணிகளும், 12.3 கோடி ரூபாய் மதிப்பில் நடக்கிறது. ஜெ., வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம், அரசுடைமை ஆக்கப்பட்டு உள்ளது. இல்லத்தை ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்ற, அரசு திட்டமிட்டு உள்ளது. சென்னை மாவட்ட கலெக்டரின் நேரடி மேற்பார்வையில், இதற்கான முன்னேற்பாடுகள் நடக்கின்றன. நினைவு இல்லத்தில், எந்தெந்த பொருட்களை, எங்கெங்கு பாதுகாப்பாக வைக்க வேண்டும் என, பொதுப்பணித் துறையால், அளவீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதுமட்டுமின்றி, போயஸ் இல்லத்தில், பெயின்ட் அடித்தல், நினைவு இல்லத்திற்கான பெயர் பலகை வைத்தல்,மின்விளக்கு பொருத்துதல் உள்ளிட்ட சிறிய பணிகள்,பொதுப்பணி துறையால் மேற்கொள்ளப்பட உள்ளன. பொதுமக்கள்இதையடுத்து, நினைவு இல்லம் திறப்புக்கு தயாராகி விடும். ஜெ., நினைவிடத்தை, பொங்கல் பண்டிகைக்கு பின் திறக்க, முதல்வர் பழனிசாமி ., தேதி குறித்துள்ளார். இந்த விழாவுடன், ஜெ., நினைவு இல்லமும், பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE