அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., கூட்டணியில் ம.நீ.மை.,: கமல் - உதயநிதி ரகசிய பேச்சு

Updated : டிச 18, 2020 | Added : டிச 16, 2020 | கருத்துகள் (63)
Share
Advertisement
காங்கிரசை கழற்றி விட்டு, மக்கள் நீதி மையம் கட்சியை, கூட்டணியில் சேர்ப்பது குறித்து. அக்கட்சி தலைவர் கமலுடன், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.நடிகர் ரஜினி, ஜனவரி மாதத்தில், கட்சி துவக்க உள்ளார். அவரது கட்சி பிரிக்கிற ஓட்டுக்கள், தி.மு.க., ஆட்சி வருவதற்கு தடையாக இருக்கும் என, கருதப்படுகிறது. அதேபோல், 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற
தி.மு.க., கூட்டணி, மநீமை, கமல், உதயநிதி, ரகசிய பேச்சு

காங்கிரசை கழற்றி விட்டு, மக்கள் நீதி மையம் கட்சியை, கூட்டணியில் சேர்ப்பது குறித்து. அக்கட்சி தலைவர் கமலுடன், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

நடிகர் ரஜினி, ஜனவரி மாதத்தில், கட்சி துவக்க உள்ளார். அவரது கட்சி பிரிக்கிற ஓட்டுக்கள், தி.மு.க., ஆட்சி வருவதற்கு தடையாக இருக்கும் என, கருதப்படுகிறது. அதேபோல், 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற முழக்கத்துடன், தன் முதல் கட்ட பிரசாரத்தை, கமல் மேற்கொண்டுள்ளார். அதனால், ரஜினியை தொடர்ந்து, கமலும், தி.மு.க., வெற்றிக்கு முட்டுக்கட்டையாக இருப்பார் என, 'ஐபேக்' தரப்பில் கூறப்பட்டுள்ளது.


ஆலோசனை


இதனால், தி.மு.க., கூட்டணியில், மக்கள் நீதி மையம் கட்சியை சேர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்காக, காங்கிரசுக்கான தொகுதிகளை குறைக்கவும், வழிக்கு வராவிட்டால், அக்கட்சியை, கழற்றி' விடவும், தி.மு.க., ஆலோசித்து வருகிறது. காங்கிரசுக்கு பதிலாக, மக்கள் நீதி மையம் கட்சிக்கு, 40 தொகுதிகள் வரை வழங்கலாம் என, தி.மு.க., மேலிடத்திடம், 'ஐபேக்' தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கமலும், உதயநிதியும் கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்திய தகவல் வெளியாகி உள்ளது. 'தற்போதைய சூழலில் கூட்டணி தொடர்பாக, எந்த முடிவும் எடுக்க முடியாது. தேர்தல் கமிஷனிடம், 'டார்ச்லைட்' சின்னம் பெறுவதிலும், முதல் கட்ட பிரசாரத்திலும், நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்' என்ற பதிலை மட்டும், உதயநிதியிடம், கமல் தெரிவித்தாக கூறப்படுகிறது.

கமல் அளித்த பேட்டியில், ''தி.மு.க.,வுடன் கூட்டணி அமையுமா என்பதை, இப்போது சொல்ல முடியாது. ஊழலற்ற, நேர்மையான ஆட்சி அமைக்க, எங்களுடன் யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். மூன்றாவது அணி அமைந்தால், அதற்கு தலைமை ஏற்க தயார். ரஜினியுடன் இணைந்து பணியாற்றவும் தயாராக இருக்கிறேன்,'' என்றார்.

இதுகுறித்து, அவரது கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த லோக்சபா தேர்தலில், மக்கள் நீதி மையம் கட்சிக்கு ஆதரவாக, 'ஐபேக்' நிறுவனம், தேர்தல் வியூக பணியில் ஈடுப்பட்டது.ஐபேக் நிறுவனரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோரும், கமலும் நண்பர்கள்.


தொகுதிகள்


பிரசாந்த் கிஷோர் ஆலோசனையின்படி, கமலை கூட்டணியில் சேர்க்க, தி.மு.க., மேலிடம் சம்மதம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகள் ஒதுக்கினால் போதும். அதை ஏற்று, கூட்டணியில் இருக்கட்டும்; இல்லையென்றால் வெளியேறட்டும் என, தி.மு.க., நினைக்கிறது.கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் தே.மு.தி.க., கூட்டணி அமைத்ததால், தி.மு.க., ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.இந்த தேர்தலில், ஆட்சி அமைக்கும் வாய்ப்பை நழுவ விடக் கூடாது என, தி.மு.க., மேலிடம் கருதுகிறது.இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narasimhan - Manama,பஹ்ரைன்
19-டிச-202014:45:19 IST Report Abuse
Narasimhan இ ம வி கூட்டணி
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
18-டிச-202007:46:17 IST Report Abuse
Bhaskaran சங்கிகளிடம் முன்பணம் வாங்கியாச்சு உதயநிதியிடம் லம்பா வாங்கிக்கனும்னு கமால் திட்டம் போடறாரு
Rate this:
Cancel
Vaduvooraan - Chennai ,இந்தியா
18-டிச-202007:12:33 IST Report Abuse
Vaduvooraan "ஊழலற்ற, நேர்மையான ஆட்சி அமைக்க, எங்களுடன் யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்"- தெரியாமத்தான் கேட்கிறேன் ..மடியிலே பூனையை கட்டிக்கிட்டு சகுனம் பார்க்கிறா மாதிரிதான் ..திமுகவோடு கூட்டணி வெக்கிறதும். எல்லா கட்சியும் அப்படிதான் என்றாலும் ஊழல் என்றால் திமுகவை அடித்துக் கொள்ளமுடியாது- First Prize
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X