பி.எம்., கேர்ஸ் அறக்கட்டளை யாருக்கு சொந்தம்? - மீண்டும் கிளம்பியது சர்ச்சை

Updated : டிச 16, 2020 | Added : டிச 16, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
புது டில்லி: கொரோனா பெருந்தொற்று காலத்தில் தொடங்கப்பட்ட பி.எம்., கேர்ஸ் நிதி, அரசு அறக்கட்டளை என கூறப்பட்டு வந்த நிலையில், அறக்கட்டளை ஆவணங்களில் தனியார் நிறுவனம் என்று உள்ளது சர்ச்சையாகியிருக்கிறது. கொரோனா தடுப்பு நிவாரண பணிகளுக்காக பிரதமர் மோடி, மார்ச், 28ல், 'பி.எம்., கேர்ஸ் பண்டு' எனப்படும், குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிவாரண நிதியம்

புது டில்லி: கொரோனா பெருந்தொற்று காலத்தில் தொடங்கப்பட்ட பி.எம்., கேர்ஸ் நிதி, அரசு அறக்கட்டளை என கூறப்பட்டு வந்த நிலையில், அறக்கட்டளை ஆவணங்களில் தனியார் நிறுவனம் என்று உள்ளது சர்ச்சையாகியிருக்கிறது.



latest tamil news



கொரோனா தடுப்பு நிவாரண பணிகளுக்காக பிரதமர் மோடி, மார்ச், 28ல், 'பி.எம்., கேர்ஸ் பண்டு' எனப்படும், குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிவாரண நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார். கொரோனா போன்ற திடீரென ஏற்படும் பேரிடர் பிரச்னைகளை சமாளிக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்கவும் உருவாக்கப்பட்டது. இந்நிதியத்திற்கு, தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், தனி நபர்கள், நன்கொடை அளித்து உள்ளனர்.

இந்நிதியம் அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மற்றும் சில அமைச்சர்கள் அறக்கட்டளை தலைவர் மற்றும் உறுப்பினர்களாக உள்ளனர். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. பிரதமர் நிவாரண நிதி இருக்கும் போது இந்த அறக்கட்டளை ஏன் என்று ப.சிதம்பரம் போன்றோர் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பினர். பி.எம்., கேர்ஸ் நிதியை பிரதமர் நிவாரண நிதிக்கு மாற்றக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இப்பிரச்னை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் ஒரு தகவல் சர்ச்சையாகியுள்ளது. இந்த நிதி தனியார் அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறதா அல்லது அரசு அறக்கட்டளை நிர்வகிக்கிறதா என்பதே அது. கார்ப்பரேட் நன்கொடைகளை பெறுவதற்காக இது ஒரு அரசாங்க அறக்கட்டளை என வரையறுக்கப்பட்டுள்ளது. பி.எம். கேர்ஸ்க்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி அளித்தால் அது சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்கான பிரிவில் செலவிட்டதாக கருதப்படும். இந்நிலையில் பி.எம் கேர்ஸ் அறக்கட்டளையின் சட்ட ஆவணங்கள் அதன் இணையதளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதில் அரசாங்க அறக்கட்டளை என குறிப்பிடப்படவில்லை.


latest tamil news



அறக்கட்டளை ஆவணத்தின் குறிப்பு 5.3-ல், “அறக்கட்டளை செயல்பாட்டில் மத்திய, மாநில அரசுகளின் நேரடி அல்லது மறைமுக கட்டுப்பாடுகள் இல்லை. அறக்கட்டளை எந்தவொரு அரசாங்கத்திற்கும் சொந்தமானதோ, கட்டுப்பாடு கொண்டதோ இல்லை.” என வரையறுக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்திடம் பெற்ற ஆவணங்களில் பி.எம் கேர்ஸ், மத்திய அரசு அமைத்த நிதி என கூறப்பட்டுள்ளது.

ஆங்கில செய்தி சேனல் ஒன்று ஆர்.டி.ஐ., மூலம் பிரதமர் அலுவகத்திடம் பி.எம்., கேர்ஸ் அறக்கட்டளையின் சட்ட ஆவணங்களை கோரியது. அது அரசு நிறுவனம் அல்ல எனக் கூறி அவர்களது மனுவை ரத்து செய்துள்ளனர். “பி.எம்., கேர்ஸ் அறக்கட்டளை தனியார் நிறுவனமாக இருந்தால் கார்ப்ரேட்கள் அளிக்கும் நிதி எப்படி அவர்களின் சமூக பொறுப்புணர்வு திட்டங்களாக கருதப்படும்” என்று ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்டில் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murthy - Bangalore,இந்தியா
17-டிச-202001:58:53 IST Report Abuse
Murthy கொள்ளைக்காரர்கள்
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
16-டிச-202022:50:14 IST Report Abuse
Darmavan பிரதம மந்திரி நிவாரண நிதி எப்படி தனி மனிதரால் அன்டோனியோ மைனோவால் கட்டுப்படுத்தப்படுகிறது.இது ரெஜிஸ்டெர்கூட செய்யப்படாத ஒன்றாக எப்படி இருக்கிறது.அரசு ஏன் இதை தடைசெய்யவில்லை எடுத்துக்கொள்ளவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X