சென்னை:தெற்கு ரயில்வேயில், ஓய்வூதியர் குறைதீர் முகாம், வரும், 30ம் தேதி நடக்கிறது.
சென்னையில் உள்ள, தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம் மற்றும் திருச்சி உள்ளிட்ட ரயில்வே கோட்டங்களிலும், வரும், 30ம் தேதி, ஓய்வூதியர்களுக்கான குறைதீர் முகாம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடத்தப்படுகிறது.
ஓய்வூதியர்கள், 29ம் தேதி வரை, இணையதளத்தில் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தில், தங்கள் குறைகளை பூர்த்தி செய்து, அந்தந்த கோட்ட அலுவலகத்தில் நேரிலும், 'இ - மெயில்' வாயிலாகவும் சமர்ப்பிக்கலாம்.குறைதீர் முகாமில், காணொலி காட்சி வாயிலாக, ஓய்வூதியர்களின் குறைகளை, உயர் அதிகாரிகள் தீர்த்து வைப்பர். www.sr.indian railways.gov.in என்ற, இணையதள முகவரியில் கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE