பொது செய்தி

தமிழ்நாடு

தோட்டங்களில் உரமிடும் பணி: விவசாயிகள் ஆர்வம்

Added : டிச 16, 2020
Share
Advertisement
கோத்தகிரி : கோத்தகிரி பகுதியில் மழை பெய்து ஓய்ந்த நிலையில், விவசாயிகள் தேயிலை தோட்டங்களில் உரமிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.நீலகிரியில், சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. குறிப்பாக, கோத்தகிரி பகுதியில் மழையின் தாக்கம், அதிகரித்து காணப்பட்டது. கடந்த, சில நாட்களாக மழை ஓய்ந்து, காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பகல் நேரங்களில் வெயிலும், மாலை மற்றும் இரவு

கோத்தகிரி : கோத்தகிரி பகுதியில் மழை பெய்து ஓய்ந்த நிலையில், விவசாயிகள் தேயிலை தோட்டங்களில் உரமிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நீலகிரியில், சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. குறிப்பாக, கோத்தகிரி பகுதியில் மழையின் தாக்கம், அதிகரித்து காணப்பட்டது. கடந்த, சில நாட்களாக மழை ஓய்ந்து, காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பகல் நேரங்களில் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் நீர் பனியும் விழுந்து வருகிறது.
கனமழையால், நிலம் ஈரம் கண்டுள்ள நிலையில், உரமிடுவதற்கு ஏதுவான சூழல் நிலவுகிறது.இதனால், தேயிலை தோட்டங்களில் உரமிட்டு, மழை கால்வாய் அமைத்து, பராமரிப்பு பணி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X