'மெட்ரோ பணிமனை வழக்கில் மஹா., அரசு கரி பூசிக் கொண்டது'

Added : டிச 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
மும்பை:மும்பை மெட்ரோ ரயில் பணிமனை நில வழக்கில், மஹா., அரசு, முகத்தில் கரியை பூசிக் கொண்டதாக, பா.ஜ., தெரிவித்துள்ளது. மஹாராஷ்டிராவில், முதல்வர், உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாற்ற முடிவு இங்கு, முந்தைய, பா.ஜ., அரசு, ஆரே காலனி என்ற பகுதியில், மெட்ரோ ரயில் பணிமனை அமைக்க திட்டமிட்டது.இந்நிலையில், சிவசேனா

மும்பை:மும்பை மெட்ரோ ரயில் பணிமனை நில வழக்கில், மஹா., அரசு, முகத்தில் கரியை பூசிக் கொண்டதாக, பா.ஜ., தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிராவில், முதல்வர், உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது.


மாற்ற முடிவு



இங்கு, முந்தைய, பா.ஜ., அரசு, ஆரே காலனி என்ற பகுதியில், மெட்ரோ ரயில் பணிமனை அமைக்க திட்டமிட்டது.இந்நிலையில், சிவசேனா அரசு, மெட்ரோ ரயில் பணிமனை கட்டுமான திட்டத்தை, கன்ஜூமார்க் உப்பள பகுதிக்கு மாற்ற முடிவு செய்தது.இதற்காக, மும்பை புறநகர் மாவட்ட ஆட்சியர், 102 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து, மத்திய அரசு, மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அந்த மனுவில், 'மத்திய அரசுக்கு சொந்தமான, கன்ஜூமார்க் உப்பள பகுதியில், மாநில அரசு, மெட்ரோ ரயில் பணிமனை அமைக்க முடியாது' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி, திபங்கர் தத்தா தலைமையிலான அமர்வு, நில ஒதுக்கீட்டுக்கு தடை விதித்ததுடன், அந்த இடத்தில், கட்டுமானப் பணி எதுவும் நடைபெறக் கூடாது எனவும் உத்தரவிட்டுஉள்ளது.


முறையீடு



இது குறித்து, பா.ஜ., தலைவர், அதுல் பட்கல்கர் கூறியதாவது:பா.ஜ.,வை அரசியல் ரீதியாக பழிவாங்கவே, மஹா., அரசு, மெட்ரோ ரயில் பணிமனை அமையும் பகுதியை, மாற்றியது. இதற்கு, உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதன் மூலம், மஹா., அரசு முகத்தில் கரி பூசப்பட்டு உள்ளது.அதனால், சுற்றுச் சூழல் துறை அமைச்சர், ஆதித்ய தாக்கரே பதவி விலக வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். இந்நிலையில், ''மஹா., அரசு, இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யும்,'' என, மாநிலத்தின் துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
17-டிச-202014:03:07 IST Report Abuse
Sridhar ஒவ்வொரு விஷயத்திலும் தவறான இக்கட்சிகளுக்கு மக்கள் இன்னும் எப்படி வாக்களிக்கிறார் என்றுதான் புரியவில்லை. நேற்று கேரளாவில் அவ்வளவு ஊழல் மற்றும் தேசவிரோத செயல்கள் செய்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓட்டளித்திருக்கிறார்கள் தங்களுக்கு தானே ஆப்பு வைத்துக்கொள்வதில் மக்கள் சிறந்த நிபுணத்துவம் பெற்றிருக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X