பெ.நா.பாளையம் : மார்கழி முதல் நாளையொட்டி, நேற்று பெரியநாயக்கன்பாளையம், துடியலுார், கவுண்டம்பாளையம் வட்டாரங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்ததன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நரசிம்மநாயக்கன்பாளையம் மகாலட்சுமி கோவிலில் உள்ள லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில், மார்கழி மாதத்தின் சிறப்புகள் குறித்தும், திருப்பாவையின் முதல் பாடல் மற்றும் அதன் பொருள் குறித்து ஓய்வு பெற்ற ஆசிரியர் கிருஷ்ணன் எடுத்துக் கூறினார்.நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் பக்தர்கள், திருப்பாவையை சேவித்தனர். நாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் மெரமனை நிகழ்ச்சி நடந்தது. உற்சவர், தாயார்களுடன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பாலமலை ரங்கநாதர் கோவில், திருமலைநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவில்கள் உள்ளிட்ட பெருமாள் கோவில்களிலும் மார்கழி முதல் நாள் சிறப்பு பூஜைகள் நடந்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE