கோவில்பாளையம் : கோவில்பாளையத்தில், தேசிய நெடுஞ்சாலையில், அபாய நிலையிலுள்ள மரத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலை, கோவில்பாளையத்தில், கருவலுார் ரோடு பிரிவில், நாற்பது ஆண்டுகளுக்கு மேலான புளியமரம், காய்ந்து போய், மரத்தின் பட்டைகள் உதிர்ந்து காணப்படுகிறது. இதன் கிளைகள் அடிக்கடி கீழே விழுந்து அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'இந்த இடத்தில், ரோடு அகலமும் குறைவாக உள்ளது. அதிக அளவில் வாகனங்கள் செல்கின்றன. மரம் விழுந்தால் பெரும் சேதம் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையில் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை' என்றனர்.'நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், இந்த மரத்தை அப்புறப்படுத்திவிட்டு அங்கு இரண்டு மரக்கன்று நட வேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE