தமிழ்நாடு

அசத்தல்! அரசு பள்ளியில் 'ஆர்கானிக்' தோட்டம்; ஆசிரியர்களுக்கு கிராமத்தினர் பாராட்டு

Added : டிச 16, 2020
Share
Advertisement
அன்னுார் : அன்னுார் அடுத்த சொக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், இயற்கை முறையில் காய்கறி பயிரிடும் தோட்டம் அமைத்துள்ளனர். முன் உதாரண நடவடிக்கையாக அமைக்கப்பட்டுள்ள இந்த தோட்டம், கிராமத்தினரின் பாராட்டை பெற்றுள்ளது.அன்னுார் அடுத்த சொக்கம்பாளையத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்கான ஐந்து அரசு விடுதிகள்
 அசத்தல்!  அரசு பள்ளியில் 'ஆர்கானிக்' தோட்டம்; ஆசிரியர்களுக்கு கிராமத்தினர் பாராட்டு

அன்னுார் : அன்னுார் அடுத்த சொக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், இயற்கை முறையில் காய்கறி பயிரிடும் தோட்டம் அமைத்துள்ளனர். முன் உதாரண நடவடிக்கையாக அமைக்கப்பட்டுள்ள இந்த தோட்டம், கிராமத்தினரின் பாராட்டை பெற்றுள்ளது.

அன்னுார் அடுத்த சொக்கம்பாளையத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்கான ஐந்து அரசு விடுதிகள் செயல்படுகின்றன. இந்த விடுதி மற்றும் இப்பகுதி மாணவ, மாணவியர் 470 பேர் சொக்கம்பாளையம், காந்திஜி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர்.

இப்பள்ளி 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், 90 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது. இப்பள்ளியில் ரசாயனம் கலக்காத, இயற்கை முறையிலான காய்கறி தோட்டம் அசத்துகிறது. இங்கு, 25 சென்ட் இடத்தில், இயற்கை முறையில், வெண்டை, கத்தரி, மிளகாய், தக்காளி, கீரை, முருங்கை, கருவேப்பிலை, முள்ளங்கி ஆகியவை பயிரிடப்பட்டுள்ளன. வேப்பம்புண்ணாக்கு உள்ளிட்ட இயற்கை இடுபொருட்கள் மட்டுமே பயன்படுத்தி தோட்டத்தை பராமரிக்கின்றனர்.

தற்போது பள்ளி செயல்படாவிட்டாலும், தோட்டத்தில் விளையும் காய்கறிகளை அப்பகுதியில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்துகின்றனர்.

பள்ளி தலைமையாசிரியர் செந்தில்குமார் மற்றும் சத்துணவு அமைப்பாளர் மருதன் கூறுகையில், 'கடந்த மார்ச் வரை பள்ளி செயல்பட்டபோது சத்துணவு சாப்பிட்ட 150 மாணவர்களுக்கு தேவையான அனைத்து காய்கறிகளும் இந்த தோட்டத்தில் இருந்தே பெறப்பட்டன. மீண்டும் பள்ளி துவங்க வாய்ப்புள்ளதால், காய்கறி தோட்டத்தை நல்ல முறையில் பராமரித்து வருகிறோம்,'' என்றனர்.

காய்கறி தோட்டம் நன்கு பராமரிக்கப்படுவதற்கு, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளும், ஊர் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X