பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.1.52 கோடியில் குடிநீர் திட்டம்

Added : டிச 16, 2020
Share
Advertisement
மேட்டுப்பாளையம் : ஓடந்துறை ஊராட்சியில், 1.52 கோடி ரூபாய் செலவில், நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகளை, கலெக்டர் ராஜாமணி ஆய்வு செய்தார்.மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஓடந்துறை ஊராட்சியில், எட்டு கிராமங்களில்,1,850 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களில் 800 குடும்பங்களுக்கு மட்டுமே, குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.மீதம் உள்ளவர்களுக்கு, இன்னும் குடிநீர் குழாய்

மேட்டுப்பாளையம் : ஓடந்துறை ஊராட்சியில், 1.52 கோடி ரூபாய் செலவில், நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகளை, கலெக்டர் ராஜாமணி ஆய்வு செய்தார்.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஓடந்துறை ஊராட்சியில், எட்டு கிராமங்களில்,1,850 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களில் 800 குடும்பங்களுக்கு மட்டுமே, குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.மீதம் உள்ளவர்களுக்கு, இன்னும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கவில்லை. இந்நிலையில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், அனைவருக்கும், இலவச குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்க, மத்திய அரசு இத்திட்டத்திற்கு, 1.52 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இத்திட்டத்திற்கு கல்லாறு புதுார் அருகே, கோத்தகிரி ஆற்றில், தண்ணீர் தேக்கி வைக்க, கிணறு தோண்டப்பட்டுள்ளது. திட்டப்பணிகளை கோவை கலெக்டர் ராஜாமணி ஆய்வு செய்தார். இத்திட்டத்தில் ஆயிரம் வீடுகளுக்கு, இலவசமாக குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதாக, ஊராட்சி தலைவர் தங்கவேல் மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்தார்.

ஆய்வில் காரமடை பி.டி.ஓ.,க்கள் சைலஜா, சந்திரா, ஊராட்சி துணைத் தலைவர் ஜானகி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வீராசாமி, மற்றும் கோகுல் குமார், வெங்கடாசலம், சந்திரசேகர் உட்பட வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.வினோபாஜி நகரில், 60 லட்சம் ரூபாய் செலவில், சமுதாயக்கூடம் கட்டும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X