உடுமலை : உடுமலை திருமூர்த்திநகர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், துவக்க நிலை ஆசிரியர்களுக்கான பணியிடைப்பயிற்சி வகுப்பு நடந்தது.
திருமூர்த்திநகர் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், துவக்க நிலை ஆசிரியர்களுக்கு, 'ரீட் தமிழ்' என்ற செயலியை பயன்படுத்தி, எளிமையாக தமிழ் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கான பணியிடை பயிற்சி நடந்தது.ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர், கற்றல் திறனின் அவசியம், உளவியல் ரீதியாக கற்பித்தல், பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். முன்னாள் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் நடேசன் இந்த செயலியை வடிவமைத்துள்ளார். அதுகுறித்து ஆசிரியர்களுக்கு விளக்கமளித்தார். இந்த செயலியை பயன்படுத்தி, 32 நாட்களில் கற்றல் திறனை மேம்படுத்துவது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.வார்த்தைகள் ஒலிப்பு முறையை அறிவது குறித்து, பாடல்கள் வழியாக பயிற்சியளிக்கப்பட்டது. கற்றல் திறனை மேம்படுத்த, செய்தித்தாள் படிக்க வைப்பதற்கு ஒவ்வொரு நாளும் மேற்கொள்ள வேண்டிய பயிற்று முறைகள் குறித்தும், பேராசிரியர்கள் சரவணகுமார், ராசா விளக்கமளித்தனர். முதற்கட்ட பயிற்சியை தொடர்ந்து, ஒவ்வொரு நாளும், 50 ஆசிரியர்கள் வீதம், ஒன்றியம் வாரியாக மாவட்டத்திலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் இப்பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை, பேராசிரியர் பிரபாகரன் செய்திருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE