வால்பாறை : வால்பாறை - பொள்ளாச்சி ரோடு விரிவுபடுத்தும் பணியில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
வால்பாறையில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்ததால், பி.ஏ.பி.,அணைகள் அனைத்தும் நிரம்பின. மழையினால் வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில், பல்வேறு இடங்களில் தடுப்புச்சுவர் இடிந்தும், ரோடு சரிந்தும் பாதிப்பு ஏற்பட்டது.பொள்ளாச்சி ரோட்டில் பல்வேறு இடங்களில் ரோடு விரிவுபடுத்தாமல் இருந்தது. இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் பொள்ளாச்சி ரோட்டில் மழை காலங்களில் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்யும் பணியும், ரோடு விரிவுபடுத்தும் பணியும் விறுவிறுப்பாக நடக்கிறது.
நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சிவராஜிடம் கேட்ட போது, ''இந்த ஆண்டு பெய்த கனமழையால், பொள்ளாச்சி ரோட்டில் பல்வேறு இடங்களில் ரோடு சரிந்தும், தடுப்புச்சுவர் இடிந்தும் சேதமடைந்தது.மழைக்கு பின், ரோடுகள் சீரமைக்கும் பணி தற்போது நடக்கிறது. அய்யர்பாடி - கருமலை செல்லும் ரோடு, 1.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும். வால்பாறை நகரில், 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரோடு அகலப்படுத்தும் பணியும், தடுப்புச்சுவர் கட்டும் பணியும் நடந்து வருகிறது. ஆழியாறில் இருந்து வால்பாறை வரை உள்ள ரோடுகளில், 'பேட்ச் ஒர்க்' பணி விரைவில் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE