வால்பாறை : வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. இந்நிலையில், மானாம்பள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட கல்லார் பிரிவு, இட்லியாறு சுற்று பட்டகிராம்பு காட்டு பகுதியில், மூன்று வயது மதிக்கதக்க ஆண் காட்டு யானை ஒன்று காலில் அடிப்பட்ட நிலையில் நடக்க முடியாமல் தவித்தது.
இது குறித்து, மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையிலான வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். யானை நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.இந்நிலையில், சிகிச்சை பலனின்றி யானை நேற்று பரிதாபமாக இறந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று இறந்த யானையை பிரேத பரிசோதனை செய்தனர். அதன்பின், பிரேதத்தை மற்ற வன உயிரினங்களுக்கு இரையாக விட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE