பொள்ளாச்சி : பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய ஊராட்சி தலைவர், செயலாளர் மீது முதல்வர் தனிப்பிரிவுக்கு ஊழல் புகார் அனுப்பப்பட்டதை அடுத்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம், ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சி தலைவராக, சபரி நித்யா மற்றும் செயலாளராக ஈஸ்வரன் உள்ளனர்.இவர்கள், ஊராட்சியில் செயல்படும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், ஆள் மாறாட்டம் செய்து, பல லட்சம் ரூபாய் ஊழல் செய்துள்ளதாக தமிழக முதல்வவரின் தனிப்பிரிவுக்கு ஆதாரங்களுடன் புகார் அனுப்பப்பட்டுள்ளது.திட்ட பயனாளிகளிடம், அடையாள அட்டையை பெற்று வைத்துக் கொண்டு, அவர்களுக்கு மாதம், ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு, அவர்கள் பணியாற்றியது போல் கணக்கு காட்டி மோசடி செய்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
அடையாள அட்டையை கொடுத்து, மாதம்தோறும் பணம் பெறுபவர்களின் பெயர் மற்றும் விபரங்களும் புகாரில் இணைக்கப்பட்டுள்ளது.முதல்வரின் கவனத்துக்கு இந்த புகார் சென்றதையடுத்து, விசாரணை நடத்தி வரும், 20ம் தேதிக்குள் அறிக்கை அனுப்ப, தெற்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE