மடத்துக்குளம் : மடத்துக்குளம் பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து நீராதாரங்கள் நிரம்பி வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மடத்துக்குளம் பகுதியில், 20 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் உள்ளன. பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு, அமராவதி வாய்க்கால் பாசனம் கை கொடுக்கிறது. புதிய ஆயக்கட்டில் வாய்க்கால் இருந்தாலும், கிணற்றுப்பாசனம் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது.புதிய ஆயக்கட்டு பகுதியில், வழிந்தோடும் மழைநீர் தேங்குவதற்காக பல இடங்களில் தடுப்பணைகள் உள்ளன. கடந்த மாதம் இறுதியில் துவங்கிய மழை தற்போது வரை நீடித்து வருவதால், வேடபட்டி, சோழமாதேவி, பாறையூர், உள்ளிட்ட பல இடங்களிலுள்ள தடுப்பணைகள் நிரம்பி அருகிலுள்ள நீராதாரங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கிணறுகள் நிரம்பியுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE