பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, 12 பிளாக்குகளை கொண்ட, 512 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி வேகமெடுத்துள்ளது.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், கிட்டசூராம்பாளையம் - ஆச்சிபட்டி செல்லும் வழித்தடத்தில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 12 பிளாக்குகள் கொண்ட, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன.இவற்றில், மொத்தம், 512 குடியிருப்புகள் அமைக்கப்படுகின்றன. பொள்ளாச்சி, டி.கோட்டாம்பட்டி மற்றும் கிட்டசூராம்பாளையம் சுற்றுப்பகுதியில் வீடு இல்லாத, குடிசை வாழ் மக்களுக்காக கட்டப்படுகின்றன.அடுக்கு மாடி கட்டடங்கள் ஒவ்வொன்றும், தரைதளம் மற்றும் மூன்று அடுக்குகள் கொண்டவையாக அமைக்கப்படுகின்றன.
இவற்றில், கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கட்டடங்கள் முழுமை பெற்று, தற்போது பூச்சுப்பணி நடக்கிறது.கட்டுமான பொறியாளர்கள் கூறுகையில், 'அடுக்குமாடி குடியிருப்புகள் பணி நிறைவு பெற, 18 மாத காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. எட்டு மாதங்களில், ஐந்து பிளாக்கள் நிர்ணயிக்கப்பட்ட உயரத்துக்கு கட்டப்பட்டுள்ளன. மற்ற பிளாக்குகள், தரைதளப்பணிகள் முடிந்து, முதல் தளம் அமைக்கும் பணி நடக்கிறது.கட்டுமானப்பணிகள் வேகமாக நடப்பதால், குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே, வீடுகள் கட்டி முடிக்கப்படும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE