பொது செய்தி

தமிழ்நாடு

மார்கழி மாதம் பிறந்தாச்சு...  கோவில்களில் சிறப்பு பூஜை

Added : டிச 16, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், மார்கழி மாதம் பிறப்பையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.மாதங்களில் நான் மார்கழி என எம்பெருமாள் கூறுகிறார். குளிர் நிறைந்த மார்கழி மாதத்தில், அதிகாலை நேரத்தில் எழுந்து, நீரில் குளித்து, திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறைவனை வழிபாடு செய்கின்றனர்.பக்தர்கள், கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வதும்; பலர் குழுக்களாக

பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், மார்கழி மாதம் பிறப்பையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மாதங்களில் நான் மார்கழி என எம்பெருமாள் கூறுகிறார். குளிர் நிறைந்த மார்கழி மாதத்தில், அதிகாலை நேரத்தில் எழுந்து, நீரில் குளித்து, திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறைவனை வழிபாடு செய்கின்றனர்.பக்தர்கள், கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வதும்; பலர் குழுக்களாக இணைந்து, பஜனை பாடல்களை பாடி தெருக்களில் அதிகாலை நேரத்தில் திருவீதியுலா செல்வதும் வழக்கமாக உள்ளது. இந்தாண்டு, கோவில்களில் மார்கழி மாதத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நேற்று துவங்கின.

பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜப் பெருமாளுக்கு காலை, 4:30 மணிக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனைகள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. இதில், சமூக இடைவெளி பின்பற்றி பக்தர்கள் பங்கேற்றனர்.ஆனைமலை ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில், மார்கழி மாத முதல்நாள் சிறப்பு பூஜை நேற்று நடந்தது. விழாவையொட்டி, ஒன்பது வகை அபிேஷகங்கள் நடைபெற்றன. மேலும், ஒன்பது வகையான மலர்களால் எம்பெருமாளுக்கு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.வால்பாறைவால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், காலை, 7:00 மணிக்கு அபிேஷக பூஜையும், 8:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவிலில் காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமமும், 6:00 மணிக்கு அபிேஷக பூஜையும், 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பாடல்களை பாடினர்.

உடுமலை

உடுமலை பெரியகடை வீதி சீனிவாச பெருமாள் கோவிலில், நேற்று அதிகாலை பஜனையுடன் சிறப்பு பூஜை துவங்கியது. காலை, 7:00 மணி வரை, பெருமாளுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. பூமிநீளா நாயகி சமேத சீனிவாசா பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், விநாயருக்கு, பால், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களில் அபிேஷக அலங்காரம் நடந்தது. சவுரிராஜ பெருமாள் சுவாமிகளுக்கு, சிறப்பு அலங்கார பூஜையுடன் தீபாராதனை நடந்தது.குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில், சிறப்பு வழிபாடு நேற்று முதல் துவங்கியது.

மார்கழி நிறைவு பெறும் வரை, அதிகாலை, 5:00 மணிக்கு சிறப்பு பஜனை, காலை, 6:00 மணிக்கு, ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடக்கிறது. ரங்கமன்னார் சுவாமிகளுடன் ஆண்டாள் நாச்சியார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சுவாமிகளுக்கு, முத்தங்கி அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கையாக, கோவில் வளாகத்துக்குள், திருப்பாவை பாசுரம் பஜனை சேவை நடந்தது.

- நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X