சிதம்பரம்: கடலூர் மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டது.மேற்கு மாவட்ட பா.ஜ., அரசு தொடர்பு பிரிவு சார்பில் சிவபுரியை சுற்றியுள்ள புளியடி, காலவாய்மேடு, சிவபுரிசாலை ரோடு, பெரிய தெரு மற்றும் சிதம்பரம் குருஞானசம்பந்தர் பள்ளி முகாமில் வெள்ளத்தால் பாதித்து தங்கியுள்ள 2000 பேருக்கும் அதிகமானோருக்கு மேற்கு மாவட்ட அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் உணவு, பிஸ்கட் வழங்கினார். பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், அரசு தொடர்பு பிரிவு துணைத் தலைவர் குருமூர்த்தி, நிர்வாகிகள் அருண்குமார், அன்புகுமார், கமலக்கண்ணன், சிவக்குமார், ரவி, சிலம்பரசன், சந்திரசேகர், கந்தவேல், சுந்தரமூர்த்தி, துரைராஜ், குணாளன், சுரேஷ்குமார், வெங்கடேசன், சிவராமன், ராஜ்கிரண், பாலா, ராஜா, மணிகண்டன், ராமச்சந்திரன், அன்புராஜ், ஆனந்தன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE