எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

நேரடி விவாதம்: கமலுக்கு மத்திய அமைச்சர் சவால்

Updated : டிச 17, 2020 | Added : டிச 16, 2020 | கருத்துகள் (42)
Share
Advertisement
''புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்டுவதற்கான அவசியம் குறித்து, நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுடன் நேரடியாக விவாதிக்க தயார்,'' என, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரான, பா.ஜ.,வை சேர்ந்த ஹர்தீப் சிங் பூரி சவால் விடுத்துஉள்ளார்.டில்லியில், 971 கோடி ரூபாய் செலவில், புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்டுவதற்கான, அடிக்கல் நாட்டு விழா, கடந்த, 10ம் தேதி
நேரடி விவாதம், கமல், மத்திய அமைச்சர், ஹர்தீப் சிங் பூரி, சவால்

''புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்டுவதற்கான அவசியம் குறித்து, நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுடன் நேரடியாக விவாதிக்க தயார்,'' என, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரான, பா.ஜ.,வை சேர்ந்த ஹர்தீப் சிங் பூரி சவால் விடுத்து
உள்ளார்.

டில்லியில், 971 கோடி ரூபாய் செலவில், புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்டுவதற்கான, அடிக்கல் நாட்டு விழா, கடந்த, 10ம் தேதி நடந்தது. இந்த கட்டடம் கட்டுவதை, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.


100 ஆண்டுகள் பழமைஇதற்கிடையே, மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், 'கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து, பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், 1,000 கோடி ரூபாய் செலவில், பார்லிமென்ட் கட்டுவது யாருக்காக; பதில் சொல்லுங்கள் பிரதமரே' என, விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், புதிய பார்லிமென்ட் கட்டடத்தின் தேவை குறித்து, மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது:இப்போதுள்ள பார்லிமென்ட் கட்டடம், 100 ஆண்டுகள் பழமையானது.கடந்த, 1985ல், ராஜிவ் பிரதமராக இருந்த போது, சிந்தாமனி பானிக்கிரஹி தலைமையிலான கமிட்டி, பார்லி., கட்டடம் பற்றிய ஒரு அறிக்கையை, மத்திய அரசிடம் சமர்பித்தது.

அதில், 'பார்லிமென்ட் கட்டடத்தில் பல இடங்கள் பழுதாக உள்ளன. அவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது. ஆனால், ராஜிவ் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அறிக்கையை கிடப்பில் போட்டார். கடந்த, 1993ல், பார்லி.,யில், கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்த போது, உள்ளே மழை நீர் கொட்டியது. 2000ம் ஆண்டில், கட்டடத்தின் கூரை ஆங்காங்கே இடிந்து விழுந்தது.கடந்த, 2009 - 14 வரை, லோக்சபா சபாநாயகராக இருந்த மீரா குமார், புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்ட வேண்டிய அவசியம் பற்றி, அரசுக்கு கடிதம் எழுதினார்.

இதன்பின், 2012ல், பார்லி., கட்டடத்தை ஆய்வு செய்த, ரூர்கி ஐ.ஐ.டி.,யின் பூகம்ப ஆய்வு குழு, 'பார்லி., கட்டடம் பாதுகாப்பாக இல்லை' என, தெரிவித்தது.

கடந்த, 2015ல், புதிய பார்லி., கட்டடத்தின் அவசியம் பற்றி, அப்போதைய லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மஹாஜன், அரசுக்கு கடிதம் எழுதினார்.கடந்த ஆண்டு, லோக்சபாவில் புதிய பார்லிமென்ட் கட்டடத்தின் அவசியம் பற்றி, சபாநாயகர் ஓம் பிர்லா தீர்மானம் கொண்டு வந்தார்.


அவசியம்பார்லி., கட்டடத்தின் ஆயுள் முடிந்து விட்டதாலும், கட்டத்தின் கூரை பகுதிகள் இடிந்து விழுவதாலும், புதிய கட்டடம் கட்ட வேண்டிய அவசியம் பற்றி, துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான வெங்கையா நாயுடுவும், தீர்மானம் கொண்டு வந்தார்.இதையடுத்து தான், புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்ட, மத்திய அரசு முடிவு செய்தது.

இந்த காரணங்கள் எதையும் தெரிந்து கொள்ளாமல், கமல்ஹாசன், பார்லி.,க்கு புதிய கட்டடம் தேவையா என கேட்டுள்ளது, அவரது அறியாமையைத் தான் காட்டுகிறது.புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்ட வேண்டிய அவசியம் பற்றி, கமல்ஹாசனுடன் நேரடியாக விவாதிக்க நான் தயார். அது, 'டிவி' சேனல்களாக இருந்தாலும் சரி, அல்லது பொது கூட்டமாக இருந்தாலும் சரி, அதில் விவாதிக்க தயாராக இருக்கிறேன். ஆங்கிலத்திலோ அல்லது எனக்கு தெரிந்த கொச்சை தமிழிலோ விவாதிக்க தயார். இடம், தேதி, நேரம் ஆகியவற்றை, கமல்ஹாச னே முடிவு செய்யட்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

- புதுடில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18-டிச-202004:51:49 IST Report Abuse
J.V. Iyer கமல் "குய்யா..முய்யா.." என்று கூறுவதை எல்லாம் சீரியஸாக எடுத்துக்கொண்டு..
Rate this:
Cancel
17-டிச-202023:22:38 IST Report Abuse
theruvasagan இதுக்கு முன்னாடி ஒருதடவை எக்கு தப்பா பேசிட்டு விவாத மேடையில ஒரு வயதில் சிறிய பெண்மணியிடம் விளக்குமா..டி வாங்கிட்டு ஓடி வந்தும் கூட திருந்தன மாதிரி தெரியல. விசிலாடிச்சான் குஞ்சுகள் மத்தியில உடுற உதாரெல்லாம் வெவரம் தெரிஞ்சவன்கிட்ட வச்சுக்கிட்டா வில்லங்கந்தான். பார்லிமெண்டுக்கு 950 கோடியில புதுக்கட்டிடம் தேவையான்னு கேக்குற வாய் 2010 ல ஓமந்தூரார் எஸ்டேட்டுல புதிய தமிழ்நாடு சட்டசபை வளாகம் திறப்பு என்று பெயரில் ஒரு கூத்து நடந்தபோது தொறக்க வாயே இல்லாம இருந்ததா. கட்டிடத்துக்கு 2008 போடப்பட்ட எஸ்டிமேட் 200 கோடி. 2010 திருத்தப்பட்ட மதிப்பீடாக அதை 465 கோடிக்கு உயர்த்தினார்கள் அன்று ஆட்சியில் இருந்தவர்கள். முதல்வர் முத்தமிழ் வித்தகர். துணை முதல்வர் அவரது திருமகனார். பொதுப்பணித்துறை அமைச்சர் இன்றைய கட்சிப் பொருளாளர். அரைகுறை பிரசவம் மாதிரி மார்ச் 2010ல் திறப்பு விழா. மேல் கூரை கட்டுமானம் வேலை கூட அப்ப முடியல. சினிமா ஷூட்டிங்குக்கு செட் போடறவங்களை கூப்புட்டு அரங்கத்துக்கு மேலே கோபுரம் இருக்குறாப்புல ஒரு செட்டப். தப்பான சமயத்தில் தப்பான இடத்தில் தப்பான நிறுவனத்தின் மூலம் தவறுகளின் அஸ்திவாரத்தின் மீது எழுப்பப்பட்ட அந்த கட்டிடம் இப்ப வேறுவிதமா உபயோகப்படுகிறது என்பது வேறு விஷயம். அப்ப வெடிச்ச 2ஜி அணுகுண்டு ஏற்படுத்தின அதிர்வலைகளை சமாளிக்க கூட்டாளி கட்சியின் தலைவரைக் கொண்டு அந்த அரைகுறை அலங்கோலத்தை திறக்க வைத்து தாஜா செய்தது அதற்கு அடுத்த வருஷம் நடந்த சட்டசபை தேர்தலில் மண்ணைக் கவ்வின கட்சி. இப்ப நடக்குற அரசாங்கத்தின் ஊழல்களைப் பற்றி மட்டும் பட்டியல் போட்டு வக்கணையா கேள்வி கேக்கும் இந்த நேர்மையின் சிகரம் இதுக்கு முன் ஆண்டவர்கள் காலத்தில் நடந்த முறைகேடுகளை பற்றி வாயத் தொறக்காமல் ஊமையாக நடிப்பது எந்த காரணத்தால் அல்லது யார் கொடுக்கும் நிர்பந்தத்தால்.இதுக்கு முன்னாடி ஒருதடவை எக்கு தப்பா பேசிட்டு விவாத மேடையில ஒரு வயதில் சிறிய பெண்மணியிடம் விளக்குமா..டி வாங்கிட்டு ஓடி வந்தும் கூட திருந்தன மாதிரி தெரியல. விசிலாடிச்சான் குஞ்சுகள் மத்தியில உடுற உதாரெல்லாம் வெவரம் தெரிஞ்சவன்கிட்ட வச்சுக்கிட்டா வில்லங்கந்தான். பார்லிமெண்டுக்கு 950 கோடியில புதுக்கட்டிடம் தேவையான்னு கேக்குற வாய் 2010 ல ஓமந்தூரார் எஸ்டேட்டுல புதிய தமிழ்நாடு சட்டசபை வளாகம் திறப்பு என்று பெயரில் ஒரு கூத்து நடந்தபோது தொறக்க வாயே இல்லாம இருந்ததா. கட்டிடத்துக்கு 2008 போடப்பட்ட எஸ்டிமேட் 200 கோடி. 2010 திருத்தப்பட்ட மதிப்பீடாக அதை 465 கோடிக்கு உயர்த்தினார்கள் அன்று ஆட்சியில் இருந்தவர்கள். முதல்வர் முத்தமிழ் வித்தகர். துணை முதல்வர் அவரது திருமகனார். பொதுப்பணித்துறை அமைச்சர் இன்றைய கட்சிப் பொருளாளர். அரைகுறை பிரசவம் மாதிரி மார்ச் 2010ல் திறப்பு விழா. மேல் கூரை கட்டுமானம் வேலை கூட அப்ப முடியல. சினிமா ஷூட்டிங்குக்கு செட் போடறவங்களை கூப்புட்டு அரங்கத்துக்கு மேலே கோபுரம் இருக்குறாப்புல ஒரு செட்டப். தப்பான சமயத்தில் தப்பான இடத்தில் தப்பான நிறுவனத்தின் மூலம் தவறுகளின் அஸ்திவாரத்தின் மீது எழுப்பப்பட்ட அந்த கட்டிடம் இப்ப வேறுவிதமா உபயோகப்படுகிறது என்பது வேறு விஷயம். அப்ப வெடிச்ச 2ஜி அணுகுண்டு ஏற்படுத்தின அதிர்வலைகளை சமாளிக்க கூட்டாளி கட்சியின் தலைவரைக் கொண்டு அந்த அரைகுறை அலங்கோலத்தை திறக்க வைத்து தாஜா செய்தது அதற்கு அடுத்த வருஷம் நடந்த சட்டசபை தேர்தலில் மண்ணைக் கவ்வின கட்சி. இப்ப நடக்குற அரசாங்கத்தின் ஊழல்களைப் பற்றி மட்டும் பட்டியல் போட்டு வக்கணையா கேள்வி கேக்கும் இந்த நேர்மையின் சிகரம் இதுக்கு முன் ஆண்டவர்கள் காலத்தில் நடந்த முறைகேடுகளை பற்றி வாயத் தொறக்காமல் ஊமையாக நடிப்பது எந்த காரணத்தால் அல்லது யார் கொடுக்கும் நிர்பந்தத்தால்.இதுக்கு முன்னாடி ஒருதடவை எக்கு தப்பா பேசிட்டு விவாத மேடையில ஒரு வயதில் சிறிய பெண்மணியிடம் விளக்குமா..டி வாங்கிட்டு ஓடி வந்தும் கூட திருந்தன மாதிரி தெரியல. விசிலாடிச்சான் குஞ்சுகள் மத்தியில உடுற உதாரெல்லாம் வெவரம் தெரிஞ்சவன்கிட்ட வச்சுக்கிட்டா வில்லங்கந்தான். பார்லிமெண்டுக்கு 950 கோடியில புதுக்கட்டிடம் தேவையான்னு கேக்குற வாய் 2010 ல ஓமந்தூரார் எஸ்டேட்டுல புதிய தமிழ்நாடு சட்டசபை வளாகம் திறப்பு என்று பெயரில் ஒரு கூத்து நடந்தபோது தொறக்க வாயே இல்லாம இருந்ததா. கட்டிடத்துக்கு 2008 போடப்பட்ட எஸ்டிமேட் 200 கோடி. 2010 திருத்தப்பட்ட மதிப்பீடாக அதை 465 கோடிக்கு உயர்த்தினார்கள் அன்று ஆட்சியில் இருந்தவர்கள். முதல்வர் முத்தமிழ் வித்தகர். துணை முதல்வர் அவரது திருமகனார். பொதுப்பணித்துறை அமைச்சர் இன்றைய கட்சிப் பொருளாளர். அரைகுறை பிரசவம் மாதிரி மார்ச் 2010ல் திறப்பு விழா. மேல் கூரை கட்டுமானம் வேலை கூட அப்ப முடியல. சினிமா ஷூட்டிங்குக்கு செட் போடறவங்களை கூப்புட்டு அரங்கத்துக்கு மேலே கோபுரம் இருக்குறாப்புல ஒரு செட்டப். தப்பான சமயத்தில் தப்பான இடத்தில் தப்பான நிறுவனத்தின் மூலம் தவறுகளின் அஸ்திவாரத்தின் மீது எழுப்பப்பட்ட அந்த கட்டிடம் இப்ப வேறுவிதமா உபயோகப்படுகிறது என்பது வேறு விஷயம். அப்ப வெடிச்ச 2ஜி அணுகுண்டு ஏற்படுத்தின அதிர்வலைகளை சமாளிக்க கூட்டாளி கட்சியின் தலைவரைக் கொண்டு அந்த அரைகுறை அலங்கோலத்தை திறக்க வைத்து தாஜா செய்தது அதற்கு அடுத்த வருஷம் நடந்த சட்டசபை தேர்தலில் மண்ணைக் கவ்வின கட்சி. இப்ப நடக்குற அரசாங்கத்தின் ஊழல்களைப் பற்றி மட்டும் பட்டியல் போட்டு வக்கணையா கேள்வி கேக்கும் இந்த நேர்மையின் சிகரம் இதுக்கு முன் ஆண்டவர்கள் காலத்தில் நடந்த முறைகேடுகளை பற்றி வாயத் தொறக்காமல் ஊமையாக நடிப்பது எந்த காரணத்தால் அல்லது யார் கொடுக்கும் நிர்பந்தத்தால்.இதுக்கு முன்னாடி ஒருதடவை எக்கு தப்பா பேசிட்டு விவாத மேடையில ஒரு வயதில் சிறிய பெண்மணியிடம் விளக்குமா..டி வாங்கிட்டு ஓடி வந்தும் கூட திருந்தன மாதிரி தெரியல. விசிலாடிச்சான் குஞ்சுகள் மத்தியில உடுற உதாரெல்லாம் வெவரம் தெரிஞ்சவன்கிட்ட வச்சுக்கிட்டா வில்லங்கந்தான். பார்லிமெண்டுக்கு 950 கோடியில புதுக்கட்டிடம் தேவையான்னு கேக்குற வாய் 2010 ல ஓமந்தூரார் எஸ்டேட்டுல புதிய தமிழ்நாடு சட்டசபை வளாகம் திறப்பு என்று பெயரில் ஒரு கூத்து நடந்தபோது தொறக்க வாயே இல்லாம இருந்ததா. கட்டிடத்துக்கு 2008 போடப்பட்ட எஸ்டிமேட் 200 கோடி. 2010 திருத்தப்பட்ட மதிப்பீடாக அதை 465 கோடிக்கு உயர்த்தினார்கள் அன்று ஆட்சியில் இருந்தவர்கள். முதல்வர் முத்தமிழ் வித்தகர். துணை முதல்வர் அவரது திருமகனார். பொதுப்பணித்துறை அமைச்சர் இன்றைய கட்சிப் பொருளாளர். அரைகுறை பிரசவம் மாதிரி மார்ச் 2010ல் திறப்பு விழா. மேல் கூரை கட்டுமானம் வேலை கூட அப்ப முடியல. சினிமா ஷூட்டிங்குக்கு செட் போடறவங்களை கூப்புட்டு அரங்கத்துக்கு மேலே கோபுரம் இருக்குறாப்புல ஒரு செட்டப். தப்பான சமயத்தில் தப்பான இடத்தில் தப்பான நிறுவனத்தின் மூலம் தவறுகளின் அஸ்திவாரத்தின் மீது எழுப்பப்பட்ட அந்த கட்டிடம் இப்ப வேறுவிதமா உபயோகப்படுகிறது என்பது வேறு விஷயம். அப்ப வெடிச்ச 2ஜி அணுகுண்டு ஏற்படுத்தின அதிர்வலைகளை சமாளிக்க கூட்டாளி கட்சியின் தலைவரைக் கொண்டு அந்த அரைகுறை அலங்கோலத்தை திறக்க வைத்து தாஜா செய்தது அதற்கு அடுத்த வருஷம் நடந்த சட்டசபை தேர்தலில் மண்ணைக் கவ்வின கட்சி. இப்ப நடக்குற அரசாங்கத்தின் ஊழல்களைப் பற்றி மட்டும் பட்டியல் போட்டு வக்கணையா கேள்வி கேக்கும் இந்த நேர்மையின் சிகரம் இதுக்கு முன் ஆண்டவர்கள் காலத்தில் நடந்த முறைகேடுகளை பற்றி வாயத் தொறக்காமல் ஊமையாக நடிப்பது எந்த காரணத்தால் அல்லது யார் கொடுக்கும் நிர்பந்தத்தால்.
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
17-டிச-202021:58:46 IST Report Abuse
Vijay D Ratnam கமல்ஹாசன் மாதிரி அரைவேக்காடுகள் தங்களை பெரிய ஆளாக காட்டிக்கொள்ள இப்புடி எதுனாச்சுக்கும் பினாத்தும். அதையெல்லாம் கண்டுக்காதீங்க ஜி. ஒரு மத்திய விமானத்துறை அமைச்சராக இருந்துகிட்டு இந்த மாதிரி பஃபூன்கள் கிட்ட மல்லு கட்டாதீங்க ஜி. ஹெச் ராஜா மாதிரி ஆளுங்கள விட்டு பதில் சொல்ல சொல்லுங்க. அவ்ளோ வொர்த் இல்ல இவரு. அதெல்லாம் விவாதத்துக்கெல்லாம் வராது. ஏற்கெனவே ஸ்மிருதி இராணி ஒரு தடவை விவாதத்துல கதற கதற ஆப்படிச்சி அனுப்பிவிட்டாய்ங்க. இது சும்மா காமெடி பீசு. 67 வயசாயிடிச்சி சினிமா மார்க்கெட் பெருசா ஒண்ணுமில்லை, ஒடனே அரசியல் ஞாபகம்வந்து இறங்கிடிச்சி. இதுக்கெல்லாம் பதில் கொடுத்தால் அப்புறம் சீமான், வேல்முருகன், தனியரசு, கருணாஸ் என்று அறிவு ஜீவிகள் எல்லாம் கெளம்பிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X