பொது செய்தி

தமிழ்நாடு

கல்லூரி மாணவர்களுக்கான உதவித்தொகை; விண்ணப்பிக்க வரும் 31 வரை அவகாசம்

Added : டிச 16, 2020
Share
Advertisement
உடுமலை : கல்லுாரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை புதுப்பித்தல் குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லுாரிகளில், அரசு நிதிஒதுக்கீட்டின் கீழ், பிற்படுத்தப்பட்ட, மிகபிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களில் கல்வி

உடுமலை : கல்லுாரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை புதுப்பித்தல் குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லுாரிகளில், அரசு நிதிஒதுக்கீட்டின் கீழ், பிற்படுத்தப்பட்ட, மிகபிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.நடப்பாண்டுக்கான மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவங்களை, அவர்களின் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று, பூர்த்தி செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அதே கல்வி நிறுவனங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை பிரிவுகளுக்கு, இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும், அதிலுள்ள விபரங்களை சமர்ப்பிக்கவும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு, டிச., 10 முதல், 31ம்தேதி வரை கால நிர்ணயம் வழங்கப்பட்டுள்ளது.இந்த காலத்துக்குள், கல்வி நிறுவனங்கள் எந்தவித விடுபடுதல் இல்லாமல் புதுப்பித்தல் பிரிவுகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்களின் வங்கி கணக்கு விபரங்களை தவறாமல் குறிப்பிட வேண்டும்.

ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்குகளுக்கு மட்டுமே, உதவித்தொகை வழங்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X