சிறுபாக்கம்: தி.மு.க., மேற்கு மாவட்டத்தில் இன்று (17ம் தேதி) நடக்கும் காணொலி கூட்டத்தில் நிர்வாகிகள் பங்கேற்க, மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ., அழைப்பு விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில், 'தமிழகம் மீட்போம்' காணொலி நிகழ்ச்சி, இன்று (17ம் தேதி) மேற்கு மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட சமூதாய கூடங்கள், திருமண மண்டபம், திறந்தவெளி அரங்குகளில் நடக்கிறது. முன்னாள், இன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், பொதுக்குழு, செயற் குழு உறுப்பினர்கள், மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய, கிளை நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகள், தொ.மு.ச., நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டணி கட்சிகள், விவசாயிகள், மாணவர்கள் உட்பட அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE