பொது செய்தி

தமிழ்நாடு

விருதை நகர ஓட்டுச்சாவடிகளில்அ.தி.மு.க., மகளிர் குழு அமைப்பு

Added : டிச 16, 2020
Share
Advertisement
விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சி ஓட்டுச்சாவடிகளில், அ.தி.மு.க., பூத் கமிட்டியில், மகளிர் குழுக்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்தது.திட்டக்குடி, விருத்தாசலம், புவனகிரி சட்டசபை தொகுதிகளில் ஓட்டுச் சாவடிகளில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் 18 பேர், மகளிர் குழுவினர், இளைஞர் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்கள் தலா 25 பேர் உட்பட 68 பேர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட

விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சி ஓட்டுச்சாவடிகளில், அ.தி.மு.க., பூத் கமிட்டியில், மகளிர் குழுக்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்தது.திட்டக்குடி, விருத்தாசலம், புவனகிரி சட்டசபை தொகுதிகளில் ஓட்டுச் சாவடிகளில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் 18 பேர், மகளிர் குழுவினர், இளைஞர் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்கள் தலா 25 பேர் உட்பட 68 பேர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட உள்ளது.விருத்தாசலம் நகராட்சி வயலுார் 1வது வார்டில், ஓட்டுச்சாவடி 209ல், 25 பேர் அடங்கிய மகளிர் குழு அமைக்கும் பணி நடந்தது. நகர செயலாளர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். நகர அவைத் தலைவர் தங்கராசு முன்னிலை வகித்தார். மகளிரணியை சேர்ந்த 25 பேரை தேர்வு செய்து, வாக்காளர் பட்டியல் கையேடு வழங்கினர்.வட்ட செயலாளர் விஜயபாஸ்கர், இளைஞர் பாசறை முரளிராஜா, அரசன், சண்முகம், சுபாஷ், சுப்ரமணியன், வேல்முருகன், மகளிரணி அஞ்சம்மாள், சாவித்ரி, அஞ்சலை, மலர்மங்கை, வீரசெல்வி உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X