கடலுார்: கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் 'தமிழகம் மீட்போம்' பிரசாரக் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்குமாறு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் தமிழகம் மீட்போம் 2021 சட்டமன்ற தேர்தல் பிரசாரக் கூட்டம், கட்சி முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் கூட்டம் இன்று மாலை நடக்கிறது.தி.மு.க., தலைவர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் சிறப்புரையாற்றுகிறார்.வடலுார் மங்கையர்க்கரசிதிருமண மண்டபத்திலும் மற்றும் கடலுார் கிழக்கு மாவட்டத்திலுள்ள ஒன்றியம், நகரம், பேரூராட்சி பகுதிகளில் உள்ள மண்டபம் மற்றும் வெளி அரங்கங்கள் 102 இடங்களில் நடக்கும் கூட்டங்களில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் உட்பட அனைத்து தரப்பு நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE