திருப்பூர் : 'பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கல்வி உதவி பெற, இம்மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம்' என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், மாணவ, மாணவியருக்கு கல்வி உதவி வழங்கப்படுகிறது. கல்லுாரியில் பயிலும் மாணவ, மாணவியர், நிபந்தனையின்றி உதவி பெறலாம். முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்கல்வி பயில்வோரின் ஆண்டு வருமானம், 2 லட்சம் ரூபாய்க்கும் மிகாமல் இருக்க வேண்டும்.பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மாணவ, மாணவியர், கல்வி உதவிகோரும் படிவங்களை, கல்வி நிலையத்தில் பெற்று, அங்கேயே பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்கள், வரும், 31ம் தேதிக்குள், விண்ணப்பங்களை, ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.அரசு, உதவி பெறும் கல்வி நிலையங்கள், அரசு ஒதுக்கீட்டில் தொழில் படிப்பு பயில்வோர், உதவி பெறலாம். ஒன்றாம் வகுப்பு முதல் இளங்கலை, முதுகலை, பாலிடெக்னிக், தொழில்படிப்பு பயில்வோர், இத்திட்டத்தில் கல்வி உதவி பெறலாம்.
புதுப்பித்தல் மற்றும் புதிய விண்ணப்பங்களை பதிவு செய்யும் போது, ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு விவரத்தை குறிப்பிட வேண்டும்.'கல்வி உதவி திட்டம் தொடர்பான தகவல்களுக்கு, கலெக்டர் அலுவலகத்தின் முதல் தளத்தில் (எண்:116) இயங்கும், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE