பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர் பாதுகாப்பில் கவனம்; ஆசிரியர்களுக்கு 'ஆன்லைன்' பயிற்சி

Added : டிச 16, 2020
Share
Advertisement
திருப்பூர் : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும், 'பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம்' சார்ந்த பயிற்சி வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அனுமதி வழங்கியுள்ளது.பள்ளிகள் திறப்புக்கு பின் மாணவர்கள் கோவிட் தொற்று சம்பந்தமான எவ்வித பயமும் இன்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்வது அவசியமாகிறது.இதுகுறித்து

திருப்பூர் : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும், 'பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம்' சார்ந்த பயிற்சி வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

பள்ளிகள் திறப்புக்கு பின் மாணவர்கள் கோவிட் தொற்று சம்பந்தமான எவ்வித பயமும் இன்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்வது அவசியமாகிறது.இதுகுறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அனைத்து ஆசிரியர்களுக்கும், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வாயிலாக பயிற்சி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களுக்கான பாதுகாப்பு அம்சம், மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம், மாணவர்களின் உளவியல் சார்ந்த பாதுகாப்பு அம்சங்கள், மாணவர்களின் பாதுகாப்பில் ஆசிரியர்களின் பங்கும் கடமைகளும் ஆகிய தலைப்புகளில் இணையதள பயிற்சி நேற்று துவங்கியது.வரும், 22 வரை நடக்கும் பயிற்சியில் தலைமையாசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.

திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், 'ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில், வீட்டில் இருந்தே, கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல் போன் உதவியுடன், tntp.tnschools.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக பயிற்சியில் பங்கேற்கலாம்.பள்ளி திறந்த பின், மாணவர்களிடையே இதனை கொண்டு சேர்த்து அவர்கள் பாதுகாப்புடன் பள்ளிக்கு வருவதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X