கம்பிகள் பெயர்ந்துள்ள பாலத்தால் விபத்து அபாயம்

Added : டிச 16, 2020
Share
Advertisement
சிதம்பரம்: சிதம்பரம் பாசிமுத்தான் ஓடை கீழமூங்கிலடி பாலத்தில், பக்கவாட்டு கம்பிகள் இல்லாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. சிதம்பரம் - கடலுார் பைபாஸ் சாலையை யொட்டி பாசிமுத்தான் வாய்க்கால் செல்கிறது. மிகவும் ஆழமான, அகலமான வாய்க்காலின் இடையில், கீழமூங்கிலடி கிராமத்திற்கு செல்ல பாலம் அமைந்துள்ளது.இப்பாலத்தை கடந்து தனியார் கல்லுாரி இருப்பதால் தினமும்

சிதம்பரம்: சிதம்பரம் பாசிமுத்தான் ஓடை கீழமூங்கிலடி பாலத்தில், பக்கவாட்டு கம்பிகள் இல்லாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. சிதம்பரம் - கடலுார் பைபாஸ் சாலையை யொட்டி பாசிமுத்தான் வாய்க்கால் செல்கிறது. மிகவும் ஆழமான, அகலமான வாய்க்காலின் இடையில், கீழமூங்கிலடி கிராமத்திற்கு செல்ல பாலம் அமைந்துள்ளது.இப்பாலத்தை கடந்து தனியார் கல்லுாரி இருப்பதால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வாகனங்கள் மற்றும் நடந்தும் செல்கின்றனர். மேலும் 5 க்கும் மேற்பட்ட கிராம மக்களும் இப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த பாலத்தின் பக்கவாட்டு கம்பிகள் பெயர்ந்து பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் விபத்து அபாயம் உள்ளது.தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன. போர்க்கால அடிப்படையில் இப்பாலத்தின் பக்கவாட்டு சுவரை சீரமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X