பொது செய்தி

தமிழ்நாடு

விசைத்தறி கடன் தள்ளுபடி

Added : டிச 16, 2020
Share
Advertisement
திருப்பூர் : விசைத்தறியாளரின் வங்கிக்கடன் தள்ளுபடி குறித்து, தமிழக அரசு பரிசீலித்து வருவதாக, கைத்தறித்துறை அமைச்சர் மணியன் தெரிவித்துள்ளார்.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், 'வேதா ஜவுளி தொழில் பூங்கா' திறப்பது குறித்து, தொழில்துறையினருடன் ஆலோசனை நடந்தது. கைத்தறித்துறை இயக்குனர், முதன்மை செயலர் மற்றும் அமைச்சர் மணியன், பங்கேற்றார்.சூலுார் சட்டசபை

திருப்பூர் : விசைத்தறியாளரின் வங்கிக்கடன் தள்ளுபடி குறித்து, தமிழக அரசு பரிசீலித்து வருவதாக, கைத்தறித்துறை அமைச்சர் மணியன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், 'வேதா ஜவுளி தொழில் பூங்கா' திறப்பது குறித்து, தொழில்துறையினருடன் ஆலோசனை நடந்தது. கைத்தறித்துறை இயக்குனர், முதன்மை செயலர் மற்றும் அமைச்சர் மணியன், பங்கேற்றார்.சூலுார் சட்டசபை இடைத்தேர்தலின் போது, விசைத்தறியாளர் வங்கிக்கடன் தள்ளுபடி செய்யப்படுமென, முதல்வர் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்மீதான நடவடிக்கை குறித்து, அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அமைச்சர் மணியன் பேசுகையில்,''கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் பல்வேறு வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். தேசிய வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்வது குறித்து, அரசு பரிசீலித்து வருகிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X