வாகன ஓட்டிகள் பெரும்பாடு| Dinamalar

வாகன ஓட்டிகள் பெரும்பாடு

Added : டிச 16, 2020
Share
திருப்பூர் : கல்லாங்காடு பகுதியில் உள்ள ரோடு மிகவும் சேதமடைந்து, வாகன போக்கு வரத்துக்கு பெரும் அவதியை ஏற்படுத்துகிறது.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வீரபாண்டி பகுதியிலிருந்து கருப்ப கவுண்டம்பாளையம், கல்லாங்காடு, முத்தையன் கோவில் வழியாக மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள தார் ரோடு உள்ளது.முக்கியமான பகுதிகளை இணைக்கும் வகையில் உள்ள இந்த ரோட்டில், எந்நேரமும்

திருப்பூர் : கல்லாங்காடு பகுதியில் உள்ள ரோடு மிகவும் சேதமடைந்து, வாகன போக்கு வரத்துக்கு பெரும் அவதியை ஏற்படுத்துகிறது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வீரபாண்டி பகுதியிலிருந்து கருப்ப கவுண்டம்பாளையம், கல்லாங்காடு, முத்தையன் கோவில் வழியாக மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள தார் ரோடு உள்ளது.முக்கியமான பகுதிகளை இணைக்கும் வகையில் உள்ள இந்த ரோட்டில், எந்நேரமும் அதிகளவிலான வாகன போக்குவரத்து இருக்கும். பல்வேறு குடியிருப்புகள், பனியன் சார்பு நிறுவனங்கள் அதிகளவில் இப்பகுதியில் உள்ளன.

இதனால் சரக்கு மற்றும் சொந்த வாகனங்கள் என இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ரோடு பெரும்பாலான இடங்களில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.அண்மையில் பெய்த தொடர் மழையால் வலுவிழந்து, பல இடங்களில் ஆழமான குழியாக மாறிவிட்டது. இவற்றில் மழைநீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.எனவே, இவ்வழியாக செல்லும் வாகனங்கள் படும் சிரமத்தை தவிர்க்க, ரோட்டை விரைவாக சீரமைக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X