திருப்பூர் : செயற்கை கால் வேண்டி விண்ணப்பித்திருந்த மாற்றுத் திறனாளர்களுக்கு நவ., 5 ம் தேதி முதல், வடக்கு ரோட்டரி சங்க உதவியுடன், அளவீட்டு முகாம் நடந்தது.பதிவு செய்த பயனாளிகளுக்கு செயற்கை கால் மற்றும் உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி நாளை (18ம் தேதி), ஊத்துக்குளி ரோடு, கருமாரம்பாளையம், ரோட்டரி சங்க அரங்கில் நடக்கிறது.நிகழ்ச்சியில், புதியதாக செயற்கை கால் மற்றும் உபகரணம் தேவைப்படும் மாற்றுத்திறனாளியின் பெயர் பதிவும் மேற்கொள்ளப்படும். கூடுதல் விவரங்களுக்கு, 94422 25500 என்ற எண்ணில் அழைக்கலாம், என, 'சக் ஷம்' அமைப்பு மாவட்ட தலைவர் ரத்தினசாமி தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE