திட்டக்குடி: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதால், திட்டக்குடியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடலுார் மாவட்ட காவல் துறையின் கீழ் கடலுார், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத் தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி என 7 உட்கோட்டங்கள் உள்ளன. மாவட்டத்தின் கடைக் கோடியில் உள்ள திட்டக்குடி உட்கோட்டம், திட்டக்குடி, ஆவினங்குடி, ராமநத்தம், வேப்பூர், சிறுபாக்கம் உட்பட 5 காவல் நிலையங்களை கொண்ட சிறிய உட்கோட்டமாக உள்ளது.திட்டக்குடி உட்கோட்டத்தில் மட்டும் மகளிர் காவல் நிலையம் இல்லை. இந்த உட்கோட்டத்தில் பெண்களுக்கு எதிரான சம்பவங்களில் புகார் கொடுக்க விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கே செல்ல வேண்டும். விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்து திட்டக்குடி உட்கோட்டத்திலுள்ள கிராமங்கள் 35 கி.மீ., முதல் 60 கி.மீ.,துாரம் வரை உள்ளது.திட்டக்குடி உட்கோட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் போக்சோ சட்டத்தில் கைதாகியுள்ளனர். பெண் வன்கொடுமை சட்டத்தில் பதியும் வழக்குகளும் அதிகரித்துள்ளன.பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், திட்டக்குடி மக்களின் நீண்ட கால கோரிக்கை யான அனைத்து மகளிர் காவல்நிலையத்தை திட்டக்குடியில் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE