தமிழ்நாடு

ரூ.2,500 கோடியில் புதிய நிறுவனம்? அடுத்த அறிவிப்பால் திடீர் குழப்பம்

Added : டிச 16, 2020
Share
Advertisement
அவிநாசி : 'சிப்காட் தொழில் பூங்கா' பிரச்னை ஓய்ந்த நிலையில், 2,500 கோடிரூபாயில், அதே தத்தனுாரில் புதிய நிறுவனம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.அவிநாசி அருகே தத்தனுாரில், 846 ஏக்கரில், 'சிப்காட் தொழில் பூங்கா' அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அதற்கு 'சுற்றுச்சூழல் மாசுபடும்; விவசாயம் அழியும்'' என கடும் எதிர்ப்பு கிளம்பியது.இதனால், மூன்று ஊராட்சி

அவிநாசி : 'சிப்காட் தொழில் பூங்கா' பிரச்னை ஓய்ந்த நிலையில், 2,500 கோடிரூபாயில், அதே தத்தனுாரில் புதிய நிறுவனம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அவிநாசி அருகே தத்தனுாரில், 846 ஏக்கரில், 'சிப்காட் தொழில் பூங்கா' அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அதற்கு 'சுற்றுச்சூழல் மாசுபடும்; விவசாயம் அழியும்'' என கடும் எதிர்ப்பு கிளம்பியது.இதனால், மூன்று ஊராட்சி பொதுமக்கள், சபாநாயகர் தனபாலிடம் முறையிட்டனர். அதனால், அவர் 'தொழில் பூங்கா கண்டிப்பாக வராது. விவசாயிகள் தைரியமாக இருக்கலாம்,' என உறுதியளித்தார்.

தற்போது, 'சொசைட்டி பார் ஸ்மார்ட் எல்க்ட்ரிக் மொபிலிட்டி' என்ற நிறுவனம், தத்தனுார் கிராமத்தில், 2,500 கோடி ரூபாய் முதலீட்டில், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இதனால், 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தத்தனுார் கிராம மக்கள் கூறியதாவது:விவசாயம் நிறைந்த தத்தனுார் கிராமப்பகுதியில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் தொழில் பூங்கா அமைக்கக் கூடாது என்ற எங்களின் கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல, சபாநாயகர் உறுதியளித்துள்ளார். இது, எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும், இது குறித்தும் சபாநாயகரிடம் தெரிவிப்போம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X