திருப்பூர் : ஊத்துக்குளி ரோட்டில், மாதக்கணக்கில் தெருவிளக்கு எரியாததால், வாகன ஓட்டிகள் அவதிபடுகின்றனர்.
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முதல், முதலாவது மற்றும், இரண்டாவது ரயில்வே கேட், கருமாரம்பாளையம், மண்ணரை வழியாக செல்லும் ஊத்துக்குளி ரோட்டில், ஈரோடு மார்க்கமாக செல்லும் பஸ், டவுன் பஸ் உள்ளிட்ட நுாற்றுக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. நகரையொட்டி, ஏராளமான குடியிருப்பு பகுதிகள், தொழிற்சாலைகள் உள்ளன.இந்த ரோட்டில், விபத்து தவிர்க்கும் வகையில், நகர எல்லை வரை, ரோட்டின் நடுவே மையதடுப்பு வைக்கப்பட்டுள்ளது.
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், மைய தடுப்புகளில் புதிய எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்டன.இதற்கென, மின் இணைப்பு கேபிள் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், மாதங்கள் பல கடந்தும், இதுவரை தெருவிளக்கு எரியவில்லை. இதனால் அவ்வழியாக செல்வோர் அவதிக்குள்ளாகின்றனர்.மாநகராட்சி அதிகாரி கூறுகையில், 'இப் பகுதியில், 72 தெருவிளக்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. மின் இணைப்பு கேபிள் பொருத்தும் பணியும், முழுமையாக நிறைவடைந்துள்ளது.மின்வாரியம் சார்பில், விரைவில் மின்இணைப்பு வழங்கப் படவுள்ளது. புதிய தெருவிளக்கு அனைத்தும், விரைவில் பயன்பாட்டுக்கு வரும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE