கடலுார்: கடலுார் பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலம் இடித்து தரைமட்டமாக்கும் பணி நேற்று துவங்கியது.புதுச்சேரியில் இருந்து வரும் வாகனங்கள் கடலுார், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், காரைக்கால் செல்ல பெண்ணையாற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் பழுதானதால் புதிய பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து நடந்து வருகிறது.உறுதியாக இருந்தும் பழைய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சில தனியார் தொண்டு நிறுவனங்கள் பழைய பாலத்தை சுத்தம் செய்து ஒரு வழி போக்குவரத்து துவங்க வலியுறுத்தினர். அதே இடத்தில் புதிய பாலம் கட்ட ரூ. 27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து பழைய பாலத்தை இடித்து அகற்றும் பணி நேற்று காலை துவங்கியது. பணி துவங்கிய சிறிது நேரத்தில் 2 கண் மதகு அளவு துாரம் பாலம் தாமாகவே விழுந்து நொறுங்கியது. தொடர்ந்து இடிக்கும் பணி நடந்து வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE