திருப்பூர் : குடிநீர் ஆப்ரேட்டர் மற்றும் துாய்மை பணியாளருக்கு சம்பள உயர்வை அமல்படுத்த கோரி, கலெக்டர் அலுவலகம் முன் நேற்று, ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர், கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைவர் பழனிசாமி, செயலாளர் ரங்கராஜன் ஆகியோர், போராட்டத்தை விளக்கி பேசினர். தொடர்ந்து, கோரிக்கையை வலியுறுத்தி, கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.துாய்மை பணியாளர் அளித்த மனு விவரம்:ஊராட்சி குடிநீர் ஆப்ரேட்டர் மற்றும் துாய்மை காவலர்களுக்கு, சம்பளம் குறைவாக வழங்கப்படுகிறது.
தமிழக முதல்வர், சம்பளத்தை உயர்த்தி அறிவித்த பிறகும், கூடுதல் சம்பளம் வழங்கப்படுவதில்லை.ஆப்ரேட்டருக்கான சம்பளம், 2,600 ரூபாயில் இருந்து, 4,000 ரூபாயாக உயர்த்த வேண்டும். துாய்மை காவலர் சம்பளம், 2,600 ரூபாயை, 3,600 ரூபாயாக உயர்த்தி அறிவிக்க வேண்டும். மூன்றாண்டு பணியாற்றியருக்கு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE