கோவை : கோவை பாரதியார் பல்கலை மற்றும் ஐ.சி.எஸ்.ஐ., இடையே கல்வி ஒத்துழைப்பு தொடர்பாக, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்திய அளவில் நிறுவன செயலாளர்களை ஒருங்கிணைத்து, அவர்களின் பணி திறனை மேம்படுத்த செயல்படும் அமைப்பு தான், 'தி இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செக்ரட்டரீஸ் ஆப் இந்தியா'(ஐ.சி.எஸ்.ஐ).இந்த ஐ.சி.எஸ்.ஐ., மற்றும் கோவை பாரதியார் பல்கலை இடையே, வெபினார் மூலம் கல்வி ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில், புதிய தேசிய கல்வி கொள்கையை பல்கலைகளில் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து, குழு விவாதம் மேற்கொள்ளப்பட்டது. இதில், பாரதியார் பல்கலை துணைவேந்தர் காளிராஜ், பதிவாளர் முருகன், டில்லி ஐ.சி.எஸ்.ஐ., தலைவர் ஆசிக் கார்க், துணை தலைவர் நாகேந்திர ராவ், உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்த ஒப்பந்தம் மூலம், பாரதியார் பல்கலை மற்றும் ஐ.சி.எஸ்.ஐ., இடையே பரஸ்பர கல்வி மற்றும் பயிற்சி ஒத்துழைப்புகள் சாத்தியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், ஐ.சி.எஸ்.ஐ., கோவை வட்டத்தின் தலைவர் சிங்காரவேல், பாரதியார் பல்கலையின் வணிகவியல் துறை தலைவர் சுமதி, பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE