கோவை : முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரத்யேக மருத்துவ கிட் வழங்க அரசு நிதி ஒதுக்கி, ஓராண்டாகியும், கோவை மாவட்டத்தில் இதுவரை வழங்கப்படாமல் இழுத்தடிப்பதாக, மாற்றுத்திறனாளிகள் புகார் தெரிவித்தனர்.
பிற உடல் ஊனத்தை போன்று அல்லாமல், முதுகு தண்டுவடத்தால் பாதிக்கப்படுபவர்கள் இடுப்புக்கு கீழ், செயல் இழந்து முழுமையாக பிறரின் உதவியில் தான் உயிர்வாழ நேரிடுகிறது.மலம் கழித்தல், சிறுநீர் தொற்று, படுக்கை புண் போன்றவற்றால் இவ்வகை மாற்றுத்திறனாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இவர்களது கோரிக்கையை ஏற்று ஓராண்டுக்கு முன்பு, 'மருத்துவ கிட்' வழங்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
கோவை மாவட்டத்திற்கு, 4 லட்சத்து,38,850 ரூபாய் இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது.பிற மாவட்டங்களில் மூன்று முறை, இத்திட்டத்தின் கீழ் மருத்துவ உபகரணங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், கோவையில் ஒரு முறை கூட, இதுவரை வழங்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.
உடனடியாக இத்திட்டத்தின் கீழ், மருத்துவ உதவிகளை வழங்கவும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவபரிசோதனை, இச்சிகிச்சைக்கு அரசு மருத்துவர் ஒருவர் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும்,கலெக்டர் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE