பேரூர் : பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு, தமிழக கவர்னர் வரவுள்ளதால், பாதுகாப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கோவை வேளாண் பல்கலையின், 41வது பட்டமளிப்பு விழா, இன்று மாலையில் நடக்கவுள்ளது. அதில், துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு மற்றும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்கின்றனர்.முன்னதாக, காலை, 10:00 மணியளவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், சுவாமி தரிசனம் செய்கிறார்.
அதையடுத்து, நேற்று காலையில், எஸ்.பி., அருளரசு தலைமையிலான போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.கோவில் நிர்வாகம் சார்பில், தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. நடப்பாண்டில், இரண்டாவது முறையாக பேரூர் கோவிலுக்கு கவர்னர் வரவுள்ளார். கடந்த, ஜன., 15ம் தேதி மாலையில் வருகை தந்து, சுவாமி தரிசனம் செய்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE