சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீசிடம் தப்பிய வழிப்பறி நபர் 'லபக்'

Added : டிச 16, 2020
Share
Advertisement
கோவை : கோவையில் சிறைக்கு அழைத்து சென்ற போது, தப்பிய வழிப்பறி ஆசாமியை, ஒசூரில் போலீசார் மடக்கி பிடித்தனர்.ரத்தினபுரி, தயிர் இட்டேரியை சேர்ந்தவர் பிரபு,20. இவர் மீது பல்வேறு வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால், அவரை சாய்பாபாகாலனி போலீசார் தேடி வந்தனர்.கடந்த 11ம் தேதி, பிரபுவை மீண்டும் கைது செய்து, கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி

கோவை : கோவையில் சிறைக்கு அழைத்து சென்ற போது, தப்பிய வழிப்பறி ஆசாமியை, ஒசூரில் போலீசார் மடக்கி பிடித்தனர்.

ரத்தினபுரி, தயிர் இட்டேரியை சேர்ந்தவர் பிரபு,20. இவர் மீது பல்வேறு வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால், அவரை சாய்பாபாகாலனி போலீசார் தேடி வந்தனர்.கடந்த 11ம் தேதி, பிரபுவை மீண்டும் கைது செய்து, கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு, அவிநாசி கிளை சிறையில் அடைக்க, போலீசார் அழைத்து சென்றனர்.

சிறையில் அடைப்பதற்கு முன், கோவை அரசு மருத்துவமனைக்கு, மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்ற போது, பெண் எஸ்.ஐ.,யை தள்ளி விட்டு, தப்பி ஓடினார்.தனிப்படை போலீசார், பிரபுவை தேடி வந்தனர். ஓசூரில் பதுங்கியிருந்த அவரை, தனிப்படையினர் மடக்கி பிடித்து, கைது செய்து மீண்டும் சிறையிலடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X